ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரதமர் ஆக அம்மா ரெடி

துணிவு,தேசப்பற்று,மொழி ஆற்றல்,நிறைந்த அறிவு கொண்டவர் ஜெயலலிதா பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டால் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர் சோ அத்வானி நரேந்திரமோடி முன்னிலையில் கோரிக்கை வைத்தார்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற துக்ளக்' ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது எந்த ஊழலிலிருந்தும் காப்பாற்றக் கூடியவராக பிரதமர் மன்மோகன் சிங் மாறியுள்ளார். யார் என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் நல்லவர்தான் என்று கூறுபவர் அவர்.  இப்படிப்பட்டவரின் தலைமையில் செயல்படும் மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்ற ஒரு நல்ல காரியத்தை செய்ய முனைந்து கொண்டிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்றபோதும், அது நல்ல விஷயம்.  போட்டி காரணமாக கலப்படம், எடைக் குறைப்புகள் ஒழிய மத்திய அரசின் இந்த முயற்சி முக்கியக் காரணமாக அமையும். ஆனால், இதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் மத்திய அரசு செய்துவிடவில்லை தேர்தலின்போது கறுப்புப் பணத்தை 100 சதவீதம் ஒழிப்போம் என மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தார் ஆனால், இப்போது வியாபாரம் போய்விடும் என்பதால், வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிடத் தயங்குகின்றனர்.  காமென்வெல்த் ஊழல் தஸ்தாவேஜுகளை காணோம்  ஸ்பெக்ட்ரம் ஊழல் சாதிக்பக்ட்சாவை காணோம்.தயாநிதிமாறன் விஷயம் நடந்து 2 ஆண்டுகள் மேல் கோர்ட்டில் விசாரணை வருது வருது என்றுதள்ளிகொண்டு போகும் போது தயாநிதிமாறன் சும்மா இருப்பாரா இதையெல்லாம் பார்த்துகொண்டு மன்மோகன் சிங் பேசாம இருக்கிறார்.மவுனகுரு அவர். இப்ப சிதம்பரம் பிரணாப் முகர்ஜி போட்டிவேறு நடக்கிறது.இந்த கவர்ன்மெண்ட் மாதிரி இத்தனை ஊழல் செய்த கவர்ன்மெண்ட் எதுவும் இருந்ததில்லை.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழலுக்கு உடந்தையாக மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதேநேரம் பாஜகவிலும் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.  காங்கிரஸ் என்றால் சோனியாவை நம்பித்தான் கட்சியே உள்ளது. இதுபோல் ஜெயலலிதா இல்லையெனில் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்காது.  அவருக்கு முன்னர் எம்.ஜி.ஆர்.தான் அதிமுக என்றிருந்தது. ஆனால் பாஜகவில் நிலைமை வேறு. தகுதியான நபர்கள் முன்னிலைக்கு வந்துகொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தலைவர். இந்த சுதந்திரம் காரணமாக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி உள்ளது. இதுதான் பாஜகவின் பிரச்னை குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, தனது திறமையை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார் அதற்குப் பிறகும் கூட அகில இந்திய அளவில் அவரை அங்கீகரித்துக் கொள்ளவில்லையெனில் அது நமது முட்டாள்தனம். நரேந்திர மோடியை இந்திய அளவில் அங்கீகரிக்க வைக்கும் முயற்சியை மூத்த தலைவர் அத்வானியால்தான் செய்து முடிக்க முடியும். ஏனெனில், அவரால்தான் பாஜகவையும் வழிநடத்த முடியும் பிரதமர் வேட்பாளரை முதலில் அறிவிக்க வேண்டும். அதுவே, வாக்காளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். ஆனால், அதுவே மிகப் பெரிய பிரச்னையையும் பாஜக​வுக்குள் ஏற்படுத்திவிடும் இதுபோன்ற காரணங்களால், பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல், பாஜக ஆதரவு ஆட்சிதான் மத்தியில் அமையும் என்றால், முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஆதரவு தெரிவிக்க வேண்டும் அதற்குத் தேவையான தேசப் பற்றும், அர்ப்பணிப்பும் அவருக்கு உள்ளது. பலமொழிகள் தெரிந்தவர் எதையும் ஆழ்ந்து படிக்கும் அவரது அறிவு விஷயங்களை உடனடியாக கிரகித்துகொள்ளும்அறிவு,  தேசப்பற்று இவை அனைத்தும் கொண்டவர் ஜெயலலிதா.இவை ஆட்சி செய்வதற்க்கு அவசியமானவை. இலவசங்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்கு மக்களை வளர்க்க வேண்டும்.  ஆனால், இலவசங்கள் அறிவிக்கப்படாவிட்டால், திமுகவை அகற்ற முடியாத நிலை தமிழகத்தில் நிலவியது. அதன் காரணமாகத்தான் அதிமுகவும் இலவசங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது சசிகலா மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கட்சியிலிருந்து nullநீக்கியது, ஒரு தவறு நடக்கிறது என்றால் அதன்மீது முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு தெளிவான, தைரியமான நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கான சிறந்த உதாரணம் அவர் பொசிஷனில் இதுமாதிஉரி நடவடிக்கை எடுக்க யாருக்கு தைரியம் இருக்காது.இது மிகப்பெரிய அறுவைசிகிச்சைத்தான்.குஜராத்தைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது. ஆனால், தொடர்ந்து ஆட்சிசெய்ய வாய்ப்பு கிடைக்காததுதான் தமிழக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.5 ஆண்டுகள் ஒரு டிரைவரிடம் கொடுத்தால் அவர் குடும்பத்தையெல்லாம் வண்டியில் ஏற்றி வண்டி பாரம் தாங்காமல் ஒவ்வொருபர்ட்ஸாக உடைத்து விடுகிறார்.அடுத்து வரும்போது அதை சரிசெய்யவே 5 ஆண்டு ஆகி விடுகிறது. எனவே, தொடர்ச்சியாக 10 ஆண்டு ஆட்சி வாய்ப்பு அதிமுக​வுக்குக் கொடுத்தால், குஜராத்தைத் தமிழகம் மிஞ்சிவிடும்' கருணாநிதி போன தேர்தலில்  தோற்றதிலிருந்து அவர் மீளவே இல்லை.கனிமொழிப்பற்றி நான்சொன்னதை கேட்டு கலைஞர் டிவி பங்குதாரர் ஆனதை தவிர வேரு எந்த தவறையும் செய்யவில்லை என்கிறார்  இவர் சொன்னதை கேட்டால் என்ன கதி என்பதை பார்த்து கொள்ளுங்கள்.கூடங்குளம் வராமல் எங்கும் போய்விடாது அது ஸ்பான்ஸர்கள் நடத்தும் போராட்டம் முதல்வர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயலலிதாவிற்க்கு பத்திரிக்கைகள் பெரிதாக ஆதரவு கிடையாது அப்படி இருந்தும் பெரிய வெற்றி பெற்றார். உடன் யார் உதவியும் இல்லாமல் தன்னைத்தானே நம்பி செயல்பட்டார் எம்ஜியாருக்கு கூட இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது இல்லை. யாரை நம்பி ஜெயலலிதாவை நம்பி கட்சி இரண்டாக பிளந்த போது ஒன்றாக்கியது,ஆட்சியமைத்தது இவையெல்லாம் அவரது போராட்டகுணமே.மத்திய அரசின் ஒத்துழைப்பும் இல்லை.
இவ்வாறு சோ பேசினார். அடுத்து நரேந்திர மோடி பேசியதாவது : பொருளாதார நிலையில் இந்தியாவைக் காட்டிலும் சீனா மூன்று மடங்கு உயர்ந்து காணப்படுகிறது சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி அடிப்படையில் இல்லாததே இதற்குக் காரணம். எதிலும் அரை மனதுடனான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக இதே நிலைதான் nullநீடித்து வருகிறது ஓட்டு வங்கி அரசியல் காரணமாக, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை நிறைவேற்ற ஆட்சியிலிருக்கும் கட்சிகள் மறுத்து வருகின்றன ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழலும் புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது. தமிழக மக்கள், இதுபோன்ற ஊழல்களை சகித்துக் கொள்ள முடியாது என்பதை சமீபத்திய தேர்தல்களில் காண்பித்துள்ளனர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மிகப் பெரிய அளவில் கவனம் செலுத்தவேண்டும். இளைஞர்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சிகளை அளிக்க வேண்டும். பலம் வாய்ந்த இந்தியாவில் கூட்டாட்சி அரசியல் முக்கியம். ஆனால், மத்தியில் ஆளும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி, கூட்டாட்சி ஜனநாயகத்தை சீரழித்துவிட்டது. விவசாயத்தை மிகப் பெரிய அளவில் ஊக்குவிக்க, மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக