தினமனி காஷ்மீர் மக்கள் கல் எறிந்தபோது பாகிஸ்தானிடம் காசு வாங்கிக் கொண்டு கல் எறிகிறார்கள் என்று நாகூசாமல் செய்தி வெளியிட்டது ஆனால் உண்மையென்ன
இந்த புகைப்படங்களை பாருங்கள்.
இந்த புகைப்படங்களை பாருங்கள்.
இந்த கல்லெறித் திருவிழாவிற்கு காரானமானவன் ஜனவரி எட்டாம் தேதி காஷ்மீரில் கொல்லப்பட்ட இனாயத்கான் என்ற பதினாறு வயது இளைஞன் தான் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்ற துடிப்பான பையன் டூவிஷன் வகுப்புக்குப் போகும் வழியில் பாதுகாப்புப் படையினர் அவனை சுட்டு கொன்றனர். அவனை அடக்கம் செய்யும் போது, இனாயத், தேரே கூன்ஸே இன்கிலாப் ஆயேகா” (இனாயத் உன்னுடைய உதிரத்திலிருந்து புரட்சி வந்தே தீரும்) எனும் முழக்கம் விண்ணை அதிர வைத்தது இறந்த உயிர்களுக்கு நீதி கேட்டு சொந்த உயிர்களை பணயம் வைத்து முடிவுறாத முழக்கங்களுடன் தெருவுக்கு வருகிறார்கள் இனியும் வருவார்கள்.
கொல்லப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்க, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக செய்திகளை மறைப்பதற்குத்தான் அரசு பெரிதும் முயன்றது.
சென்ற ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் பதின்பருவ இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள் மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி 57க்கும் மேற்பட்டவர்கள் இது வரை கொல்லப்பட்டார்கள். சிலர் விளையாட்டு மைதானத்திலும் வீட்டுச்சரிவுகளின் அருகிலும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவ்வாறு கடந்த juneல் மட்டும் 13 குழந்தைகள் துடிதுடித்துச் செத்திருக்கிறார்கள், ஸ்ரீநகரில் கனி மெமோரியல் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற பதின்மூன்று வயதே ஆன வமிக் பாரூக் ஜனவரி 31ஆம் நாள் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி இறந்தான் அடுத்த ஐந்து நாள்களுக்குள் ஷாஹித் பாரூக் எனும் பதினாறு வயது இளைஞன் தன் வீட்டின் அருகிலேயே எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கொல்லப்பட்டான். ஏப்ரல் 13ஆம் நாள் ஜீலம் நதிக்கரை ஒரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் சுபைர் அஹமது பட்(17) இராணுவத்தினர் தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் பிள்ளைகள் நதியில் குதித்து விட்டனர். மற்றவர்கள் எல்லாம் நீந்திக் கரை சேர்ந்தபோது சுபைர் மட்டும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டன். அவனைக் காப்பாற்றப் படகுக்காரர்கள் சிலர் முயன்ற போதும் அவர்கள்மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தது இராணுவம். அதனால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சுபைரின் சாவை சாதாரண விபத்து என்று குறிப்பிட்டு வழக்கை முடித்திவிட்டார்கள். நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை இதுதான் இந்திய அரசாங்கம் கஷ்மீரிகளுக்கு வழங்கும் பாதுகாப்பின் இலட்சனம். ஒரு சுகந்திர நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பும் மரியாதையும் கூட காஷ்மீர் மக்களுக்கு கிடைப்பதில்லை.
700 கோடி அரசாங்க இழப்பீடுகளை பற்றி ஊளையிடும் தினமலர் என்றைக்காவது ஜனநாயக வழியில் போராடி தங்களுடைய விலை மதிக்கமுடியாத108 உயிர்களை இழந்த காஷ்மீரிகளைப் பற்றி ஒரு தலைப்பு செய்தியாவது வெளியிட்டுருக்குமா?
ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய நடுநிலையாளர்களும், முஸ்லிம்களும் தினமலரை போன்று பாசிச சிந்தனை கொண்ட பத்திரிகைக்கு எதிரான உண்மையை சொல்லும் மாற்று ஊடகத்தை கட்டமைப்பது அவசியம்.
இவையே நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய கடமைகள். ஒப்பாரி வைப்பதை நிறுத்திச் செயலில் இறங்குவோம்.
ஊடகத்தை ஊடகத்தால் சந்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக