அழகாக தோன்ற வேண்டும் என்று விரும்புகின்ற பெண்களுக்கு நீளமான கூந்தல் மிகவும் முக்கியமானது. ஆனால் சீனாவில் உள்ள Huangluo கிராமத்தை சேர்ந்த சிவப்பு யாவ் இன பெண்களுக்கு நீளமான கூந்தல் எப்போதுமே அத்தியாவசியமானதாக இருந்து வருகின்றது.
சிவப்பு நிற பாரம்பரிய உடையை அணிகின்றவர்கள் சிவப்பு யாவ் இனத்தவர்கள். Huangluo கிராமத்தில் சிவப்பு யாவ் இனத்தவர்கள் மொத்தமாக 82 வீடுகளில் வசிக்கின்றனர்.
சிவப்பு நிற பாரம்பரிய உடையை அணிகின்றவர்கள் சிவப்பு யாவ் இனத்தவர்கள். Huangluo கிராமத்தில் சிவப்பு யாவ் இனத்தவர்கள் மொத்தமாக 82 வீடுகளில் வசிக்கின்றனர்.
இங்கு உள்ள சிவப்பு யாவ் இன பெண்கள் ஒவ்வொருவருமே மிகுந்த அக்கறையுடன் கூந்தல் வளர்க்கின்றனர். இங்கு உள்ள சிவப்பு யாவ் பெண்களில் சுமார் 120 பேரின் கூந்தலுடைய சராசரி நீளம் 1.7 மீற்றர். 2.1 மீற்றர் நீளமுடைய கூந்தலை உடையவர்களும் இருக்கின்றார்கள். ஆகவேதான் நீண்ட கூந்தல்கள் உடைய முதல் கிராமம் என்கிற கின்னஸ் சாதனைக்கு Huangluo கிராமம் உரித்தாகி உள்ளது.
இக்கிராமத்தை சேர்ந்த சிவப்பு யாவா பெண்களின் வாழ்க்கையில் கூந்தலுக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. கணவன், குழந்தைகள் ஆகியோரை தவிர வேறு ஆட்கள் இவர்களின் அவிழ்ந்த கூந்தலை பார்க்க முடியாது என்கிற வழக்கம் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்து வந்துள்ளது.
கோடை காலத்திலும், இலையுதிர் காலத்திலும் இப்பெண்கள் நீராட ஆறுகளுக்கு செல்வார்கள். ஆனால் வேறு எவரும் காணாதபடி நீல நிற துணியால் கூந்தலை மறைத்து கொள்வர். கணவனாக வருபவர் மாத்திரமே இப்பெண்களின் கூந்தல் அழகை காண்கின்ற சிறப்புரிமையை உடையவர்.
உள்ளூர்க்காரரோ, வெளியூர்க்காரரோ எவராயினும் சரி எதிர்பார்த்து இராத விதத்தில்கூட இப்பெண்களில் ஒருவரின் அவிழ்ந்த கூந்தலை பார்த்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வளவுதான். பெண்ணின் வீட்டாருக்கு மூன்று வருடங்கள் மருமகனாக இருக்க வேண்டும். ஆயினும் இந்த வழக்கம் எல்லாம் 1987 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து விட்டது.
இப்பெண்கள் தற்போது மிகுந்த பெருமையுடன் விரிந்த நீண்ட அழகிய கூந்தலை எவ்வித சங்கடமும் இன்றி பகிரங்கமாகவே காட்டிக் கொள்கின்றனர்.
இந்த பெண்கள் வாழ் நாளில் ஒரு முறைதான் கூந்தலை வெட்ட முடியும். அதுவும் 16 வயதை அடைந்தவுடன். காதலனை கண்டு பிடிக்கின்றமைக்கான அருகதையை 16 வயதில் பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் வெட்டப்பட்ட கூந்தல் எறியப்பட மாட்டாது. அம்மம்மாவிடம் கொடுக்கப்படும். அம்மம்மா இதை வைத்து அலங்கார கொண்டை தயார் செய்வார். பேத்திக்கு திருமணம் நடக்கின்றபோது இந்த அலங்கார கொண்டையை மணமகனுக்கு பரிசாக கொடுப்பார். பின் இக்கொண்டை பேத்தியின் பின்னலுக்கு எப்போதும் அழகு சேர்க்கும்.
இப்பெண்களின் கூந்தல் மூன்று விதமான ஜடைகளை கொண்டு இருக்கும். முதலாவது தலையில் வளர்ந்து இருக்கின்ற ஜடை. இரண்டாவது வெட்டப்பட்ட ஜடை, மூன்றாவது தலையில் இருந்து உதிர்ந்து விழுகின்ற மயிர்களை நாளாந்தம் பொறுக்கி ஆக்கப்பட்ட ஜடை.
இம்மூன்று விதமான ஜடைகளும் சேர்ந்துதான் இப்பெண்களின் கூந்தல் அழகுக்கு மெருகு ஊட்டும். அத்துடன் சமூக அந்தஸ்து மற்றும் தராதரம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தி நிற்கும்.
இவர்கள் கூந்தலை தலையின் மேல் முழுமையாக சுற்றி தட்டம் போல் மடித்து முடிந்து வைத்து இருப்பார்கள். ஆனால் இந்த மடிப்பு வெறுமனே ஆனதாக இருந்தால் திருமணமாகியும் குழந்தை இல்லாதவர் என்றும், மடிப்பின் முன்பகுதியில் சிறிய கிளிப் அணியப்பட்டு இருந்தால் திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என்றும் தலைப் பாகை கட்டப்பட்டு இருந்தால் பொருத்தமான காதலனை எதிர்பார்த்து காத்து கிருக்கின்றார் என்றும் காண்பவர்கள் ஊகித்துக் கொள்ள முடியும்.
இவர்கள் அரிசி தண்ணீரில் இருந்து ஆக்கப்பட்ட சம்போ ஒன்றை பயன்படுத்தி நீராடுகின்றமை மூலமே செழிப்பான கூந்தலை பெறுகின்றனர் என்று நம்பப்படுகின்றது.
நீண்ட கூந்தல் அதிஷ்டம், செல்வம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை கொடுக்கும் என்பது இவர்களின் பாரம்பரிய விசுவாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக