ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்மா பகவான் ஒரு ச(த)ரித்திரம் : முட்டாள்களுக்கு ஓர் விழிப்புணர்வு பதிவு


கவனம்--பதிப்பு கொஞ்சம் நீளம்தான் சும்மா வாசித்து பாருங்கோவன்… அம்மா பகவான் உருவாக்கம்:-விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள்(மச்ச அவதாரம்,கூர்ம அவதாரம்,வராக அவதாரம்,நரசிம்ம அவதாரம்,வாமன அவதாரம்,பரசுராம அவதாரம்,ராம அவதாரம்,பலராம அவதாரம்,கிருஷ்ண அவதாரம்,கல்கி அவதாரம்) பத்தாவது அவதாரம் என தன்னை உருக்காட்டிக்கொண்ட நபர்தான் இன்றைய அம்மா பகவான்.இவரின் அறிமுகம் என்னவோ சுமாராகத்தான் இருந்தது ஆனால் போகப்போக இவரின் புகழ் உச்சிக்குப் போகதொடங்கியது இதற்கு முக்கியமான காரணம் “வித்தியா மாலை” என்ற சொல்தான்.

“வித்தியா மாலை’க்கு வித்திட்ட முத்துக்கள்..




“வித்தியாமாலை” என்ற சொல்தான் எனக்கு அம்மா பகவானை அறிமுகப்படுத்தியது.வித்தியாமாலை பற்றி கட்டாயம் சொல்லத்தான் வேண்டும். “வித்தியாமாலை” (கள்ளச்)சாமியார்களின் தந்திரங்களில் உச்சக்கட்டம் என்று சொலும் அளவிற்கு பலரையும் தன்பால் ஈர்த்தது. ஐந்து மணிநேரம் படித்தால் எவனும் பரீட்சையில் சித்தியடையலாம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டார் அம்மா பகவான். அதுதான் இந்த வித்தியாமாலை என்ற தந்திரம். இந்த மாலையை அணிந்து 21 நாள் அம்மா பகவனை நோக்கி விரதமிருந்தால் பரீட்சையில் சிறந்த பெறுபேறு கிடைக்குமாம்.அப்படி கிடைக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஐந்து மணித்தியாலம் படிக்க வேண்டுமாம். இவர்களின் வசிப்பிடமான ‘சத்திய லோகம்’ (ONENESS CENTER) ஆகும்.இது பார்ப்பதற்கு இன்னொரு வெள்ளை மாளிகை போல இருக்கும்.இதனுடைய மதிப்பு சுமாராக 400 மில்லியன் அமெரிக்க டாலர்.(இது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியல)

இன்னொரு வெள்ளை மாளிகை..



இவ்வளவு காசுக்கும் யார் பொறுப்பு..?யார் காசு..? இவைகள் எல்லாம் கணக்கில் வராத காசா..?இல்லை கணக்கு போட்டதால் வந்த காசா..? என்று தெரியலை.எது எப்படியோ இது கொஞ்சம் அதிகம்தான் (கள்ளச்)சாமியார்களுக்கு..!



அம்மா பகவான் ஒரு காமடி பீஸ்:-இவ்வளவும் போகட்டும் இவர்கள் தங்களை ஏதோ அருங்காட்சிப் பொருள் என்று நினைத்துக்கொண்டு பார்ப்பதற்கு ரூ.10000(இந்திய காசு..) பேசுவதற்கு ரூ.20000(இந்திய காசு..) என அப்பாவி மக்களிடம் பணம் வசூலித்து கொண்டிருக்கின்றார்கள்.இதிலும் என்ன வேடிக்கை என்றால் இவரை பார்ப்பதற்கு காசு கட்டிவிட்டு இவரை பார்ப்பதற்க்கு காத்துநிற்க வேண்டுமாம்.(இதைதான் பார்ப்பதற்கு தவம் இருக்கின்றது என்றது போல) சரி அப்படியே இவரை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் ஒரு சில நிமிடங்களே பார்க்க முடியுமாம்.(செம காமடி இல்ல..) இப்படி காசு கட்டி அம்மா பகவானை பார்த்தால் கட்டின காசு பல மடங்குகளாக பெருகுமாம்(நல்லா பெருகும் வாங்கின கடனுக்கு வாட்டிதான் பெருகும்..) அம்மா பகவானை பார்ப்பதற்கு,பேசுவதற்கு என்று ஒரு விலை இருக்கிறது இதுபோல படுக்குறதுக்கு என்ன விலை என்று சொல்லவில்லையே…?

amma bakavan


காசு கட்டிதான் அவர்களை பார்க்க வேண்டும் என்ற கருத்தில் துளி கூட எனக்கு உடன்பாடு இல்லை..இவரை கடவுளின் அவதாரம் என்று சொல்லாமல் நடிகர் S.J.SURYA “வியாபாரி” படத்துல சொன்னது போல “100% Business Man” என்றே சொல்லலாமே.இந்த பொளப்பு பிளைக்கிறதுக்கு நீங்க எல்லாம் நாக்கை புடுங்கீட்டு சாகலாமே…!


நல்லா போஸ் குடுக்குறீங்க



  • கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் இவர்களுக்கு ஒரு “சைடு பிசினஸ்” வேற இருந்தது. வேற என்ன எல்லா பணக்காரங்களும் செய்யுறத போல சினிமா எடுக்கிறதுதான் அதுவும் “பினாமி” பேர்லதான். இப்படி இவங்க தயாரித்த படங்களில் ஒன்று முரளி,சிம்ரன் நடித்த ‘கனவே கலையாதே’(சுனாமி வரும்போது மக்களை காக்க முடியாததுகள் எல்லாம் பினாமிய வைத்து படம் எடுத்து இருக்குதுகள்)
கலைந்து போன கனவு…


சாமியார்கள் சினிமா எடுக்கிறதப் பற்றி எனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது, ஆனாலும் சமுதாய அழுக்குகளை சுத்தப்படுத்தி ஒரு பரிசுத்த உலகத்தை உருவாக்குவதே என் அவதார நோக்கம் என்று கூறும் இந்த கலியுக கல்கி அவதாரங்கள் சமூகத்துக்கு கருத்தைச் சொல்லும் படங்களை ஏன் எடுக்கவில்லை என்பது என் மனதில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்துகின்றது…

இது தொடர்பாக எனது நண்பனான ஒரு அம்மா பகவான் பக்தனிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது அவன் எனக்கு கூறிய பதில் என்மனதில் இன்னும் ஒரு கேள்வியை எழுப்பியது. அவன் பதிலானது ” அடேய் அந்த படங்களை அம்மா பகவான் தயாரிக்கவில்லை, அந்த படங்களை தயாரித்தது அம்மா பகவானின் பக்தர் ஒருவர்தான் அந்த பக்தர் படங்களை தயாரிக்கும் முன் அம்மா பகவானிடம் அந்தப்படம் வர்த்தகரீதியில் வெற்றி பெற வேண்டுமென்று ஆசீர்வாதம் பெற்றுத்தான் படத்தை தயாரித்தாராம், அம்மா பகவானும் அவருக்கு அருள் புரிந்தார் “.

ஆனால் நான் அறிந்தவரையில் அந்த திரைப்படம் வர்த்தகரீதியில் தயாரிப்பாளரை திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.(மண் கவ்வியது என்றும் சொல்லலாம்)இந்த இடத்தில்தான் எனக்குக் கேள்வி எழுந்தது, கடவுளின் (கள்ளக் கடவுள்)அருளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை என்றால் அவருக்குச் சக்தி எதுவும் இல்லையா? அப்படியானால் சக்தியில்லாதவர்களை ஏன் மக்கள் வணங்குகிறார்கள்? “சாணக்யா” படத்தில சரத்குமார் சொல்லுறதப்போல எல்லாம் “பப்ளிசிட்டி” தான்.
  • இதுக்கிடையில சில வருடங்களுக்கு முன்பு அம்மா பகவான் பக்தர்கள் ஒரு பெரிய கூத்தையே நடத்தயிருந்தாங்க. ஆனா பினிஷிங் டச்சிலத்தான் கோட்டவிடுட்டாங்க.அதுதான் கொழும்பு வாழ் பக்தர்களின் கனவில் வந்த அம்மா பகவானின் கதைதான், “அகதி முகாம்களில் வாழும் வன்னி மக்களுக்கு உதவுங்க” என்று பக்தர்கள் கனவில் சொன்னாறாம் அம்மா பகவான். நல்ல விசியம்தான். ஆனா அது பேச்சோட நின்றுவிட்டதே, நடந்ததாக தெரியவில்லை.கனவில் வந்து சொன்ன அம்மா பகவான் ஏன் அவர் சொன்னதை செய்யாத பகதர்களுக்கு புத்தி புகட்டவில்லை.அப்படி என்றால் சாமி(கள்ளச் சாமி)வார்த்தைக்கு மரியாதையை இல்லையா? இப்படி இருக்கும் போது அவர்களை எப்படி சரித்திரமென்று சொல்லமுடியும்..தரித்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்

சரி உங்கள் அம்மா பகவான் ‘கல்கி’ அவதாரமோ ‘கல்கண்டு’ அவதாரமோ ‘ஆனந்த விகடன்’ அவதாரமோ சக்தியுள்ள அவதாரம் என்றால் எமது உள்நாட்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து துன்பப்படும் மக்களை சந்தோசப்படுத்தட்டும்..எங்கை பார்ப்பம் செய்ய சொல்லுங்கள் பார்ப்பம்…


என்ன சின்ன புள்ள தனமாக இருக்கு…


  • மகன் வெளிநாடு போக வேண்டும் என்றால் VISA OFFICE ல போய் கதைக்கணும் அதை விட்டுட்டு ஏன் அம்மா பகவானிடம் போறீங்கள்..?இதுகூட பறவாயில்லை அப்டியே வெளிநாடு போற விஷயம் சரி வந்துட்டா..அது அம்மா பகவான் கிருபையால வந்தது என்று துடங்கீடுறது…அப்டி என்றால் VISA OFFICE ல வேலை செய்யுற எல்லோரையும் கும்பிடுங்கள்…(நீங்க எல்லாம் நல்லா வருவீங்க…

பிடியுங்க..சார்..பிடியுங்க பிடிச்சு தூக்கில போடுங்க… 
  • சரி இந்த சின்ன புள்ள தனத்தைதான் விடுங்க…ஒரு சில பேர் பிள்ளை இல்லை என்று அம்மா பகவானிடம் போகின்றார்கள்..அடடா இது எங்கயோ இடிக்குதே..(பாலையும் பூனையையும் பக்கத்த வைத்தால் என்ன நடக்கும் இது சும்மா பூனை என்றாலும் பறவாயில்லை கள்ளப் பூனை வேறை பிறகு என்ன கதை கந்தல் தான்…) அப்படி பிள்ளை இல்லை என்றால் நல்ல வைத்தியரிடம் சென்று காட்டுங்கள்..அதை விட்டுட்டு சும்மா அம்மா பகவனை தொல்லை பண்ணாதீங்கள்..அவரும் பாவம் எத்தனை பேருக்குதான் பிள்ளைய கொடுக்குறது..(டையட் ஆகீட மாட்டாறு பாவம்…)


படத்தில் இருந்து நெய் வருகின்றது:-சரி இப்ப நீங்கள் கேட்கலாம் ‘அப்ப படத்தில இருந்து நெய்,திருநீறு வருகின்றதே அதற்க்கு என்ன சொல்லுறீங்கள்’என்று அது எல்லாம் ஒரு சித்து விளையாட்டு அ..ஆ படத்தில

S.J.SURYA சொன்னதை போல “இருக்கு ஆனா இல்ல” என்றதுபோல

ஒரு விஷயம்..சித்தை நம்புற மனிதன் ஏனோ தெரியவில்லை சிவத்தை நம்ப மறக்கின்றான்..(சித்து நிரந்தரம் இல்லாதது ஆனால் சிவம் நிரந்தரமானது..)


குறுகிய காலத்தில் பயனை அடைய வேண்டும் என்பதற்காக நம்முள் பலர் சித்தை நம்புகின்றார்கள்.அவை எதுவும் உண்மையானது இல்லை.சிவத்தை அடைவது சுலபமான காரியம் இல்லை..ஆனால் சிவம் உண்மையானது,நிரந்தரமானது..



கும்பிடுவதற்க்கு கடவுளா இல்லை:-சைவ சமயத்தை எடுத்துகொண்டால் முதல் கடவுள் சிவன்..சிவனின் துணைவி,பிள்ளைகள் என்று எல்லோரும் கடவுள் அவர்களின் அவதாரங்களும் கூட கடவுள் (பார்வதியார்,முருகன்,பிள்ளையார்) சிவனின் மச்சான் விஷ்ணுவும் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் கடவுள்..இது தவிர விஷ்ணுவின் ராம அவதாரத்தில் ராமனுக்கு உதவிய அனுமார் கூட கடவுள்தான்..இவளவும் ஏன் சீதை கூட கடவுள்தான்..


நல்லா கூடுறாங்கையா கூட்டம்…



இவ்வளவு பெரிய கடவுள் வலையமைப்பை கொண்டது எம் சைவ சமயம் ஆனால் நம்மவர் கள்ள சாமிகளை நம்பி ஏமாறுவதில்தான் குறியாக இருக்கின்றார்கள்..


1 கருத்து: