ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி ?

“ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி” என்று மணமக்களை வாழ்த்துவது தமிழர் பண்பாடு.
இத்தகைய பெருமைக்குரிய அருகம்புல் இந்தியா முழுவதும் வளரும் ஒரு புல்வகையைச் சேர்ந்தது.
கரும்பச்சை நிற இலைகளைக்கொண்ட அருகம்புல் பல அடி தூரங்களுக்கு தரையடித்தண்டு, வேர்கிழங்கு மூலம் பரவி காணப்படும்.
தெய்வாம்சம் மிக்க புல்
வீட்டுத்தோட்டத்தில் அருகம்புல்லை பயிரிடவேண்டும். விநாயகரின் விருப்பத்திற்குரிய அருகம்புல்லை விநாயகருக்குச் சமர்ப்பித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அருகம்புல்லை தூர்வாயுக்மம் என்பார்கள். உயிரினங்களின் துன்பங்களைத் தீர்ப்பவர் விநாயகர், மக்களின் எல்லா வகையான நோய்களையும் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. எனவே இதனை விநாயகருக்கு உரியதாக சொல்கின்றனர்.

மருத்துவகுணம்

முழுத்தாவரமும், இலைகள் மற்றும் வேர் கிழங்குகள் மருத்துவப்பயன் கொண்டவை.

தாவரத்தின் தழைப்பகுதியின் சாறு சிராய்ப்புகளுக்கு பூசப்படுகிறது. இது தசை இருக்கும் தன்மை கொண்டது.

இலைகளின் சாறு குளிர்ந்த தன்மையுடையது. இதனை பாலுடன் கலந்து பருகினால் மூலநோய் ரத்த கசிவு குணமாகும். சிறுநீர் கழிப்பு உறுப்புகளின் எரிச்சலை போக்கும்.

வேர்களை அரைத்து தயிரில் கலந்து பருகினால் புறமேக நோய் குணமாகும்.




அருகம்புல் ரசம்:


தேவையான பொருட்கள்:
அருகம்புல் – 1 கைப்பிடி
மிளகு – 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – வாசனைக்கேற்ப
பூண்டு – சிறிது
புளி – கொட்டை பாக்கு அளவு
கறிவேப்பிலை – நம் தேவைக்கேற்ப
எலுமிச்சம்பழம் – 2
வெந்தயம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்.

எப்படி செய்வது? 

அருகம்புல்லை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
இதை சல்லடை அல்லது மெல்லிய துணியில் வடிகட்டி சாறாக்கவும்.
துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்து, அதில் புளி அல்லது எலுமிச்சம் பழத்தை பிழிந்து வைக்கவும்.
சீரகத்தை தண்ணீர் விடாமல் அம்மியில் பொடி செய்யவும்.
மிளகை 4, 5 ஆக உடைக்கவும். பட்டுப் போல் தூளாக இருக்கக் கூடாது.
பூண்டை சிறு துண்டுகளாக வெட்டி, இவற்றுடன் பெருங்காயத்தூளையும் கலவையில் கலக்கி, உப்பு, மல்லித்தழை போட்டு தேவையான அளவு தண்ணீர் கொஞ்சம் விட்டு, அருகம்புல் சாற்றையும் கலக்கி வைத்து, பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, வெந்தயத்தையும், காய்ந்த மிளகாயையும், கறிவேப்பிலையும் போட்டு சிவக்க வெந்தவுடன், ரசக்கலவையை அதில் ஊற்றி, கொதிக்க விடாமல் நுரை கெட்டி வரும்போது இறக்கி, ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி அதில் போடவும்
சுவையான அருகம்புல் ரசம் தயார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக