ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

யு.ஏ.இ:கடுமையான வட்டியை வசூலிக்கும் க்ரெடிட் கார்டுகள்


துபாய்,:யு.ஏ.இயில் வங்கிகளால் அளிக்கப்படும் க்ரெடிட் கார்டுகள் (கடன் அட்டை) வாடிக்கையாளர்களிடமிருந்து கடுமையான வட்டியை வசூலிப்பதாக அந்நாட்டில் வெளியாகும் அல் கலீஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மாதந்தோறும் 2.25 சதவீதம் முதல் 2.99 சதவீதம் வரையிலான வட்டியை யு.ஏ.இயில் வங்கிகள் வெளியிடும் க்ரெடிட் கார்டுகள் மூலம் வசூலிப்பதாக இப்பத்திரிகை குற்றஞ்சாட்டுகிறது.

வருடாந்திர வட்டிவிகிதத்தில் இது 35 சதவீதமாகும். சவூதி அரேபியா, கத்தர், பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகளில் வங்கிகள் அளிக்கப்படும் க்ரெடிட் கார்டுகள் மூலம் இரண்டு சதவீதத்திற்கு குறைவான வட்டி வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக