ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா 'அப்துல் கலாம்' ஆசாத்: இது பிரதமர் மடலின் கூத்து!

 பிரச்சனைகள் குறித்து தேசியவாத காங்கிரசுடன் விவாதிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது: பிரதமர் மன்மோ�தமிழக மற்றும் புதுவை மாநில அரசுகளுக்கு பிரதமர் அனுப்பிய கடிதத்தில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்பதற்கு பதிலாக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குழம்பியுள்ளனர்.

விடுதலைப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமானவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத். அவரின் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை தேசிய கல்வி நாளாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்நாளை கல்வி உரிமை நாளாகக் கொண்டாடுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன் சிங் தனது கையெழுத்துடன் கூடிய கடிதத்தை அனுப்பினார்.
அந்த கடிதம் அந்தந்த மாநிலத்தின் மொழியில் இருந்தது. தமிழகம் மற்றும் புதுவைக்கு தமிழில் எழுதி அனுப்பப்பட்டிருந்த கடிததத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதுவை அரசு அந்த கடிதத்தின் நகல்களை அரசுத் துறைகள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது.
அந்த கடிதத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்பதற்கு பதிலாக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த மாணவர்கள் எங்களின் பாடப்புத்தகங்களில் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்று உள்ளதே. இந்த கடிதத்தில் பிரதமர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிட்டுள்ளாரே. அப்படி என்றால் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் தான் யார் என்று ஆசிரியர்களை கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக