ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? இளைஞர்கள் மத்தியில் பரவும் எஸ்.எம்.எஸ். செய்தி


அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்து, இளைஞர்கள் மத்தியில் பரபரப்பு எஸ்.எம்.எஸ். செய்திகள் பரவி வருகின்றன.
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு
வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவிற்கு, நாடு முழுவதும் எதிர்பாராத அளவு ஆதரவு பெருகி வருகிறது.



இந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். மூலம் பல வித்தியாசமான தகவல்கள் பரவி வருகின்றன. அதில், அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்று, வெளிநாட்டு வங்கியில் உள்ள கறுப்பு பணம் மட்டும் மீட்டு கொண்டுவரப்பட்டால், என்னென்ன ஆச்சரியங்கள் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று, ஒரு பரபரப்பு பட்டியலே வருகிறது. அதில், கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

நிதி நிலைமையில் முதலிடம்

வெளிநாட்டு வங்கியில் உள்ள ரூ.1,456 லட்சம் கோடி கறுப்பு பணம் மீட்டு கொண்டுவரப்பட்டால், இந்தியா நிதி நிலைமையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க முடியும். கிராமங்களுக்கு தலா ரூ.100 கோடி கிடைக்கும்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு யாரும் வரி கட்டவேண்டிய அவசியமே இருக்காது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.25-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.15-க்கும், பால் ஒரு லிட்டர் ரூ.8-க்கும் தாராளமாக வழங்க முடியும். மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. அனைவருக்கும் இலவசமாகவே மின்சாரம் கிடைக்கும்.

ரப்பர் சாலை

இந்திய எல்லையில் சீன பெருஞ்சுவரைவிட நீளமான, வலிமையான சுவரை எழுப்ப முடியும். உலக புகழ் வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போல், 1500 பல்கலைக்கழகங்களை இந்தியாவில் தொடங்கலாம்.

பாரீஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது போல், 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரப்பர் சாலை அமைக்க முடியும். அனைத்து வசதிகளையும் கொண்ட 2 ஆயிரம் நவீன ஆஸ்பத்திரிகளை தொடங்கி, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கலாம். 95 கோடி மக்களுக்கு சொந்த வீடு கட்டிக்கொள்ள முடியும்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஒத்துழைக்க, ஒவ்வொருவரும் இந்த செய்தியை 10 இந்தியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவியுங்கள். நான் என் கடமையை செய்து விட்டேன். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அந்த தகவல் பரவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக