ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

50 வயதைத் தொட்ட அமுல் பேபி!

The Utterly Butterly Amul Girl Tu
அழகாய் புசு புசு கன்னங்களும் குட்டி கவுனும் போட்டு வரும் குட்டிப் பெண் குழந்தைகளை கண்டால் அமுல்பேபி என்று தூக்கி கொஞ்சுவார்கள். அந்த அளவிற்கு அமுல்பேபி விளம்பரத்தில் வரும் கார்டூன் குழந்தை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று, பிரபலமான ஒன்று. இந்த விளம்பரம் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

அமுல் விளம்பரங்களில் வரும் உருண்டை முகமும் முட்டைகண்களும் உப்பிய கன்னங்களும் கொண்ட புள்ளிகளிட்ட சட்டை அணிந்த குட்டிப்பெண் தான் இந்த அமுல் பேபி. அமுல் இந்திய வெண்மைப் புரட்சியின் முக்கியமான அடையாளம். மிகப்பழைமையும் புகழும் கொண்ட ஒரு பிராண்ட்.
அமுல் என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் அமுல்ய என்றால் விலைமதிப்பற்றது என்று பொருள் அதுமட்டுமல்லாமல் Anand Milk Union Limited என்பதன் சுருக்கிய வடிவமும் கூட. ஆனந்த் என்பது அமுல் தயாரிப்புகள் ஆரம்பித்த குஜராத்திலுள்ள கிராமத்தின் பெயர்.
அமுல் இந்த அளவிற்கு பெயரும் புகழும் பெற முக்கியமான காரணம் அதன் விளம்பரங்கள். அந்தந்த காலங்களின் சமூக நிகழ்வுகளை கிண்டலடிக்கும் அதன் கார்ட்டூன் வடிவ விளம்பரங்கள்.1945 ல் சந்தைக்கு வந்த அமுல் கிட்டத்தட்ட 1967 வரை வழக்கமான விளம்பர உத்திகளையே கையாண்டு வந்தது. அதன் பிராண்ட் இமேஜை மாற்றியவர் சில்வெஸ்டர் டகுன்கா (Sylvester daCunha)என்ற விளம்பர விற்பன்னர்.
உணவு பொருட்களை வாங்குவதில் முக்கிய முடிவுகளை எடுப்பது இந்தியாவை பொறுத்தவரை இல்லத்தரசிகள் தான். எனவே அவர்களுக்கு பிடித்தமான குழந்தை பாத்திரம் ஒன்றை உருவாக்க முடிவெடுத்து உருவாக்கப்படடவள் தான் இந்த அமுல் பேபி என்று அழைக்கப்படும் "அட்டர்லி பட்டர்லி குட்டிப்பெண்".
புசு புசு கண்ணங்கள் கொண்ட கார்டூன் குட்டிப்பெண் விளம்பரம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த விளம்பரத்தை உருவாக்கிய விளம்பர நிறுவனமான டாகுன்சா கம்யூனிகேசன் இதனை கொண்டாட முடிவு செய்துள்ளது.
1960 களின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளம்பர வரிசை அன்று முதல் இன்று வரை இந்தியாவில் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் நகைச்சுவை ஆவணமாகத் திகழ்கிறது. கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது அமுல் விளம்பரங்கள்.
அரசியல் சினிமா கிரிக்கெட் பண்டிகைகள் என்று எல்லா விஷயங்களையும் கிண்டலடிக்கும் அந்த விளம்பரங்களின் வெற்றி அமுல் என்கிற பிராண்டை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக