பெட்ரோல் விலை உயர்கிறது |
இந்தியாவில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரே நேரத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாள் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல், பெட்ரோல் விலை உயர்வை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ளது.
உயர்தப்பட்ட விலையின்படி, தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இனி 63 ரூபாய்க்கு மேல் இருக்கும். சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் விலை உயர்வு இன்னும் சற்றுக் கூடுதலாக இருக்கும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு அவசியம் என எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. ஏறத்தாழ 10 ரூபாய் அளவுக்கு விலையை உயர்த்த வேண்டிய நிலை இருந்தாலும் அதில் பாதியளவு மட்டுமே உயர்த்தப்பட்டதாக அவை கூறுகின்றன. அதே நேரத்தில், கூடிய விரைவில், இன்னொரு விலை உயர்வு இருக்கும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக