ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தேநீர் விருந்து: ஜெயலலிதாவுக்கு சோனியா அழைப்பு?

புதுதில்லி, மே.15: தமிழக முதல்வராக நாளை பதவியேற்க உள்ள அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்காக தில்லி வருமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு சோனியா அழைப்பு விடுத்ததாக வெளியான தகவலால் தமிழகத்தில் பரபரப்பு நிலவியது.முன்னதாக தமிழக தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதாவுக்கு சோனியா நேற்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் வெற்றிபெற்ற அனைத்து தலைவர்களையும் சோனியா தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக