போர்ட்லேண்ட்: அமெரிக்காவை சேர்ந்த ஜெப் எல்லிஸ்(55) என்பவர் சியாட்டில் நகரிலிருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் போர்ட்லேண்ட் நகருக்கு புறப்பட்டார். விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எல்லிஸ் தூங்கி கொண்டிருந்தார். அவரது கையில் சட்டைக்கு மேல் ஏதோ ஊர்வது போல் உணர்ந்தார். சிறு பூச்சியாக இருக்கலாம் என கருதி, தூக்க கலக்கத்தில் லேசாக தட்டிவிட்டார். பிறகு கையில் சுர்ரென்று வலித்தது.
கண்விழித்து பார்த்தபோது சட்டையில் தேள் ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்தார். உடனே கைக்குட்டையால் அந்த தேளை பிடித்தார். இதுகுறித்து விமான பணிப்பெண்ணிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் உடனடியாக பிளாஸ்டிக் பையை கொண்டு வந்தார். அதில் தேளை போட்டு பாதுகாப்பாக அடைத்து வைத்தார். தேள் கொட்டியதால் பீதியில் இருந்த எல்லிஸ்க்கு, விமானத்தில் பயணம் செய்த டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்தார். ÔÔதேள் கொட்டினால் இறந்துவிடுவார்கள் என சினிமாவில் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அப்படி ஒன்றும் நடக்காது. நான் குணமாகி விடுவேன்ÕÕ என பயத்தில் எல்லிஸ் அடிக்கடி கூறியதாக டாக்டர் கூறினார். அடுத்த அரை மணி நேரத்தில் விமானம் தரையிறங்கியதும் எல்லிஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பாபி எகான், ÔÔடெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் விமானம் நின்றது. அப்போது தேள் ஊர்ந்து விமானத்துக்குள் வந்திருக்கலாம்ÕÕ என தெரிவித்தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக