ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு (வீடியோ இணைப்பு)

உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு (வீடியோ இணைப்பு) சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும்.

வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது.

தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது 01 Jul 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக