இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நேற்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளுக்கு செல்லவில்லை.அனைவரும் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதனால் பள்ளிகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. இவை மட்டுமின்றி விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் முக்கிய விமான நிலையங்களான ஹீத்ரு, மான் செஸ்டர் போன்ற இடங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.
பாஸ் போர்ட் அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வெளி நடப்பு செய்தனர். வரி வசூலிப்பு அலுவலகங்கள் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களும் மூடப்பட்டன நேற்று அடையாள வேலை நிறுத்தம் மட்டுமே நடை பெற்றது. இன்னும் சில மாதங்களில் போராட்டம் தீவிரமாகும் அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக