தமிழ் படங்களில் மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைப்பது சமீபத்திய தமிழ் சினிமாவில் புது டிரெண்டாக மாறிவிட்டது. பிரபலமான ஹாலிவுட், பாலிவுட் ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததே அதற்கு காரணம்.
ஜனநாதன் இயக்கிய பேராண்மையில் நடித்த ’ரொனால்ட் கிக்னிகர்’, முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் நடித்த ’ஜானி ட்ரை ங்யூயன்’ ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் ஹரி சிங்கம்-2 படத்திற்கு தென்னாப்பிரிக்க வில்லனை தேடிக்கொண்டிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கவிருக்கும் யோஹான் படத்திற்கு ஹீரோவைத் தவிர மற்ற அனைவரும் வெளிநாட்டு நடிகர்களாம்.
ஹாலிவுட் வில்லன் வேட்டையில் முன்னணி இயக்குனர்களைத் தொடர்ந்து களம் இறங்குபவர் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். கல்யாண கிருஷ்ணன் இயக்கும் பூலோகம் படத்தில் தான் ரெஸ்லிங்(wwe) எனப்படும் குத்துச்சண்டை நட்சத்திரங்களான ஜான் ஸீனா அல்லது ஸ்டீவ் ஆஸ்டின் ஆகியோரில் ஒருவரை வில்லனாக நடிக்கவைக்கப்போகிறாராம்.
ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிப்பதும் இந்த குத்துச்சண்டை நட்சத்திரங்களின் வருகைக்கு காரணம். இதற்கு முன் M.குமரன் S/o மஹாலட்சுமி படத்தில் ஜெயம் ரவி நடித்த குத்துச்சண்டை காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் சண்டை என்பது ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாகவே அமையும். பூலோகம் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக