மே-1 நள்ளிரவில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பின்லேடன் தங்கியிருந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டு, அவரைக் கொன்றுவிட்டு உடலையும் எடுத்துச்சென்று கடலில் வீசிவிட்டதாக அமெரிக்கா ஒருபக்கம் மார்தட்டிக் கொண்டிருந்தாலும், பாகிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் உளவுத்துறைக்கும் எதிரான விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில்,"முறையான உத்தரவு கிடைத்திருந்தால் அமெரிக்க உலங்கு ஊர்தியை எல்லையிலே சுட்டு வீழ்த்தி இருப்போம்" என்று அந்நாட்டு வான்படை தளபதி ராவ் கமர் சுலேமான் தெரிவித்துள்ளார்.ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடந்த நேருக்கு நேர் கலந்துரையாடலின்போது இதைத் தெரிவித்ததாக, பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஜியோ செய்திச்சானல் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் ல்ப்டினண்ட் ஜெனரல் அஹமது ஷுஜா பாஷா, பாகிஸ்தானின் உளவு நடவடிக்கையில் தவறு நிகழ்ந்துள்ளதையும் ஒப்புக்கொண்டார். ஐ.எஸ்.ஐயுடன் பின்லேடன் வேட்டை குறித்து எந்தத்தகவலையும் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் அது தங்களது ரகசிய நடவடிக்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று அஞ்சியதாலேயே என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பின் தலைவர் லியோன் பானெட்டா ஏற்கனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக