ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ஊழல்-புது வழக்கு ரெடி-ஜூனியர் விகடன்

புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் 600 கோடிரூபாய் ஊழல் இருப்பதாக ஜெயலலிதா கருதுகிறார்...இதற்காக தனி விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு ,அதற்கு உமாஷங்கர் தலைவராக போடப்படுவார்..நட்ராஜ் கண்காணிப்பாராம்...ஸ்டாலினை குறி வைத்தே இந்த ஊழல் வழக்கு ரெடி ஆகிறது...

இந்த ஊழல்தான் முதலில் தூசு தட்டப்படுகிறது...அதன் பிறகு நிலக்கரி வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை தொடங்கும்...இதில் முதலில் இருந்தே நிலக்கரி வாங்கியதில் ஊழல் என குரல் கொடுத்து வந்தார் ஜெயலலிதா.


நான் ஆட்சி அமைத்ததும்,அரை மணி நேரத்தில் மதுரை மீட்கப்படும் என மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார் ஜெ.அதன்படி திங்கள் கிழமை பதவியேற்றதும்,மக்கள் நலத்திட்டம் ஒன்றுக்கு கையெழுத்து போட்டதும்,அடுத்த கையெழுத்து மதுரை குண்டு தளபதியை தூக்கும் ஃபைலில்தான் கையெழுத்துப்போடப்போகிறார்.


ரிசல்டுக்கு முன்பாகவே மதுரை அழகிரி ஆட்கள் மற்றும் த.கி..கொலை வழக்கு,தினகரன் எரிப்பு நபர்கள் அப்ரூவர் ஆக தயார் என தூது விட்டார்களாம்...அவர்கள் இப்போது அப்ரூவர் ஆக்கப்பட்டு,சில வழக்குகள் தயார் ஆகுமாம்...திங்கள் கிழமை அல்லது அம்மாவுக்கு ராசியான 18 ஆம்தேதி முதல் தி.மு.க ஆபரேஷன் தொடங்கப்போகிறது...

தி.மு.க அமைச்சர்களின் பினாமிகள் அனைவரும் வளைக்கப்பட்டு,அமைச்சர்களின் பி.ஏக்கள் அனைவரிடமும் ஆதாரங்கள் வாங்கப்பட்டு தனி வழக்குகள் தயார் செய்யப்படும்.

தி.மு.க அமைச்சர்கள் அபகரித்த சொத்துக்களின் உரிமையாளர்களிடம் புகார் வாங்கப்பட்டு உடனுக்குடன் நடவ்டிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...

இவை எல்லாவற்றுக்கும் கண்டிப்பான ஒரு போலீஸ் அதிகாரி தலைமையில் தனி டிபார்ட்மெண்டாக செயல்படுமாம்...

நன்றி-ஜூனியர் விகடன்

டிஸ்கி;முதல் வழக்கு பெருமையை கருணாநிதியின் துதி பாடி..கைக்கூலி....தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம நாராயணன் பெறுவார் போலிருக்கிறது..15 கோடி ஊழல் செய்திருப்பதாக ,அவரை கைது செய்யும்படி...தயாரிப்பாளர் நிர்வாகிகள் இன்று மதியம்புகார் கொடுத்துள்ளனர்...


தேர்தல் முடிவு வரத்தொடங்கியவுடன்,கலைஞருக்கு முன்பாகவே வேகமாகதனது துதி பாடி பதவியை ராஜினாமா செய்தவர் ராமநாராயணன்! கண்ணா முதல் களி உருண்டை உனக்குத்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக