ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை விமான நிலையத்தில் 100 பவுன் நகைகளுடன் கிடந்த பார்சலால் பரபரப்பு. ஓடோடி வந்த அமெரிக்க வாழ் இந்திய தம்பதி.

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில், டிராலி ஒன்றின் அருகே மர்ம பார்சல் ஒன்று அனாதையாக கிடந்தது. அந்த பார்சல் குறித்து, விமான நிலைய மேலாளரிடம் ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு லாசர் தகவல் கொடுத்தார். 
உடனே அந்த மர்ம பார்சல் பற்றி விமான நிலைய மேலாளர் மைக்கில் தகவல் அறிவித்தார். ஆனாலும் அந்த பார்சலை யாரும் எடுக்க வராததால், அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது.
எனவே, இதுபற்றி உடனடியாக விமான நிலையத்தில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பார்சலை சோதனை செய்தனர். 
அப்போது, அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பார்சலை அவர்கள் பிரித்து பார்த்தபோது, அதில் 100 பவுன் தங்க நகைகள் இருந்தன. 
எனவே, அதனை பத்திரமாக விமான நிலைய மேலாளரிடம் வெடிகுண்டு நிபுணர்கள் ஒப்படைத்தனர். இந்த நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த முத்தையா மற்றும் அவருடைய மனைவி மேரி 2 பேரும் அங்கே பரபரப்பாக ஓடி வந்தனர். அவர்கள் தாங்கள் விமானத்தில் எடுத்து வந்த பெட்டி ஒன்றை தவற விட்டு விட்டதாக தெரிவித்தனர். 
இந்த தம்பதியினர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து உள்ளனர். நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அவர்கள், விமான நிலையத்தில் காரில் ஏற வந்தபோது 100 பவுன் நகைகள் அடங்கிய அந்த பெட்டி தவறி விட்டதாக தெரிவித்தனர்.
அவர்கள் கூறிய அடையாளங்கள் சரியாக இருந்ததால், நகைகள் அடங்கிய அந்த பெட்டியை, அவர்களிடம் கடுமையாக எச்சரித்து விமானநிலைய மேலாளர் ஒப்படைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக