துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின்(யு.ஏ.இ) மாகாணமான துபாயிலும், வடக்கு அமீரக மாகாணங்களிலும் இவ்வாண்டும் 33 இந்தியர்கள் தற்கொலைச் செய்துள்ளதாக துபாயில் இந்திய தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது:
தற்கொலைச் செய்துகொண்ட 33 பேரில் 2 பேர் பெண்கள் ஆவர். தற்கொலைகள் அனைத்தையும் தடைச்செய்ய இயலாவிட்டாலும், பொது சமூகத்தின் ஒத்துழைப்பு இருந்தால் பெரும்பாலான தற்கொலைகளை தடுக்க இயலும்.
தற்கொலைச் செய்தோரில் பெரும்பாலானோர் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவைச் சார்ந்தவர்கள் ஆவர். இம்மாநிலங்களைச் சார்ந்தவர்கள்தாம் யு.ஏ.இயில் அதிகமாக பணிபுரிகின்றார்கள்.
இவ்வாண்டு ஜனவரி, மே மாதங்களில்தாம் அதிகமான நபர்கள் தற்கொலைச் செய்துள்ளனர். இம்மாதங்களில் எட்டு பேர் வீதம் மரணமடைந்துள்ளனர். பிப்ரவரி மாதம் 7 பேரும், மார்ச் மாதம் நான்கு பேரும், ஏப்ரல் மாதம் ஆறுபேரும் மரணமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தற்கொலைச் செய்துகொண்ட 76 பேரில் ஐந்துபேர் பெண்கள் ஆவர். இத்தகைய சம்பவங்கள் நிகழாமலிருக்க தூதரகத்தின் கீழ் இலவசமாக பொருளாதார, சட்ட கவுன்சிலிங் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
தாயகம் திரும்ப ஏராளாமானோருக்கு இலவசமாக விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாத 200 மாணவர்களுக்காக ஏழு லட்சம் திர்ஹத்தை தூதரகம் அளித்துள்ளது.
சம்பாதிக்கும் பணத்தை விட கூடுதல் செலவழித்து வட்டிக்காரர்களை அணுகும் பொழுது வாழ்க்கை சுமை அதிகரிக்கிறது. வெளிநாட்டு உல்லாச யாத்திரைகள், பிள்ளைகளை உயர்தர பள்ளிக்கூடங்களில் படிக்க வைப்பது போன்றவை நெருக்கடியை தீவிரமடையச் செய்கிறது. வாங்கும் சம்பளத்திற்கு ஏற்றவாறு வாழ இந்தியர்கள் தயாராக வேண்டும். இவ்வாறு இந்திய தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக