பெருந்துறை: கர்நாடக அரசால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா தமிழகத்தின் பெருந்துறையில் பண்ணை வீடு ஒன்றில் பாதாள ரகசிய அறையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையத்தில் நித்தியானந்தாவின் முதன்மை சீடர்களில் ஒருவரது வீடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு 3 கார்களில் சாமியாரும் நீண்ட முடியுடன் கூடிய சீடர்களும் நேற்று வந்திறங்கியதை பொதுமக்கள் பார்த்தும் உறுதி செய்தும் உள்ளனர். இத்தகவல் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பண்ணை வீட்டில் உள்ள பாதாள ரகசிய அறையில் பதுங்கி இருந்தபடியே வழக்கறிஞர்கள் மற்றும் சீடர்களுடன் எப்படி எஸ்கேப்பாவது என்று குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நித்தியானந்தாவுக்கு அமைக்கப்பட்டுள்ள பாதாள ரகசிய அறைகள், சதாம் உசேன் எப்படி பதுங்கி இருந்தாரோ அதேபோல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது,
இந்நிலையில் கர்நாடக காவல்துறையினர் கேட்டுக் கொண்டால்மட்டும் அவர்களுக்கு உதவ முடியும் என்று ஈரோடு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக