ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சுதந்திர இந்தியாவில் இதுவரை நடக்காதது: மத்திய அரசை எதிர்த்து ராணுவ தளபதி வழக்கு


தனது பிறந்த தேதியை ஏற்காத மத்திய அரசை எதிர்த்து, ராணுவ தளபதி வி.கே.சிங், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகால வரலாற்றில் ஒரு ராணுவ தளபதி மத்திய அரசை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும் .


நம் நாட்டின் ராணுவ தளபதியாக உள்ள, வி.கே.சிங் பிறந்த தேதியில் சர்ச்சை நிலவுகிறது. இவருடைய மெட்ரிகுலேஷன் பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி, 10.5.51 என்றும், இவரை தேசிய பாதுகாப்பு அகடமிக்கு தேர்வு செய்ய, யு.பி.எஸ்.சி., நடத்திய நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில், 10.5.50 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், தன் பிறந்த தேதி, 10.5.51 என, வி.கே.சிங் வற்புறுத்தி வருகிறார். ஆனால், இவரது கருத்தை ராணுவ அமைச்சகம் ஏற்கவில்லை. இதையடுத்து, வி.கே.சிங், வரும் மே, 31ல் ஓய்வு பெற வேண்டியுள்ளது. தன் பிறந்த தேதியை ஏற்க மறுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலை எதிர்த்து, வி.கே.சிங். சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். வி.கே.சிங்கின் சார்பில், அவரது வழக்கறிஞர் யு.யு.லலித், இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில், தாக்கல் செய்தார்.

"எனது பிறந்த தேதி பிரச்னை, கவுரவம் மற்றும் ஒருமைப்பாடு சம்பந்தப்பட்டது. 10.5.51 என்ற தேதியின் அடிப்படையில் தான் கடந்த, 36 ஆண்டுகளாக ராணுவத்தில் பல்வேறு பதவிகளை பெற்று சேவையாற்றி வந்துள்ளேன். இப்போது ஏன் எனது தேதியில் அரசு மாற்றம் செய்கிறது?' என, வி.கே.சிங் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ராணுவ தளபதி பதவியில் உள்ள ஒருவர், அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது, முன்னர் எப்போதும் நடந்திராத விஷயமாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக