ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளுக்கு வேகமாக வெளியேறும் இந்திய வரி பணம்



சர்வதேசதியத்தில் (ஐஎம்எப்) பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு ஒன்று சர்வதேச அளவில் நிகழும் நிதித்துறை முறை கேடுகளை ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி விடுதலை பெற்ற இந்தியாவில் 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21300 கோடி டாலர் அளவுக்கு பணம் (ரூபாய்க்கணக்கில் 9,58,500 கோடி ரூபாய்) இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் 68 சத வீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி 1991ம் ஆண்டுக்குப்பின் வெளியேறியுள்ளது. 

அதாவது 1991ம் ஆண்டில் நரசிம்மராவ் அமைச் சரவையில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் உலகமயக் கொள்கைகளை அதிரடியாக இந்தியாவில் புகுத்திய பிறகே இது நிகழ்ந்துள்ளது. ஆக 60 ஆண்டுகளில் கடத்தப்பட்ட பணத்தில் 3ல் 2பங்கு 20 ஆண்டு களில் உலகமயக்கொள்கைகள் அமலாக்கப் பட்டபோது வெளியேற்றப்பட்டுள்ளது. மற்றொரு புள்ளி விபரமும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது 1991க்கு முன்பு வெளிநாடுகளுக்கு சராசரியாக கடத்தப்பட்ட பணம் சதவீத அடிப்படையில் 9.1 என்றால் உலகமயக்கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பிறகு அது 16.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2002 முதல் 2006 வரையிலான நான்கு ஆண்டுகளில் அதாவது பாஜக மற் றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்ற ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 72000 கோடிரூபாய் வெளியேறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப்பட்ட பணம் 14 வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளி யாகியுள்ள செய்தியும் இதற்குப் பொருத்தமானதாக உள்ளது .

முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான எஸ்.பி சுக்லா கூறுகிறார்- நான் நேரடியாக கண்ணுற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இதில் வியப்படைய எதுவுமில்லை. தாராளமயக்கொள்கைகள் அமல்படுத்துதல் துவங்கப்பட்ட பிறகு ஊழல் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்ததற்குக் காரணம் - சந்தையே அரசாங்கத்துக்குள் நுழைந்ததனால்தான். அரசாங்கக் கொள்கைகளையும், அரசு நிர்ண யிக்க வேண்டிய விலைகளையும் தொழில் நிறுவனங்களே தீர்மானிக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டன. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடுவது மற்றும் அரசு நடவடிக்கைகளில் தொழில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன என்பது மட்டுமல்ல. அவை அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டு மொத்த ஆட்சி அமைப்புமுறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றன.

அமைப்பு முறைக்குள்ளேயே அவை தலையிடுவதற்கு பாஜக ஆட்சிக்கால அனுபவம் ஒன்றை சுக்லா உதாரணமாகக் குறிப் பிட்டுள்ளார். பாஜக ஆட்சிக்காலத்தில் அலைபேசி சேவையை நடத்துவதற்கான அனுமதியை அளிப்பதற்கு ஏலமுறைதான் முதலில் பின்பற்றப்பட்டது. பல பெரும் தொழில் நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்று அனுமதியைப் பெற்றிருந்தன. ஆனால் அந்த ஏலத்தொகைக்கு லாபம் ஈட்ட முடி யாது என்பதை அவை உணர்ந்த பிறகு, மீண் டும் அரசாங்கத்துடன் பேசி லைசென்ஸ் முறைக்கு மாறுவதற்கு அரசாங்கத்தை அவை இணங்க வைத்து விட்டன. அதனால் ஏலத்தொகையை விட குறைந்த விலைக்கு அலைபேசி சேவையைத் தொடரஅந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அர சாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் ? ஏலத்தொகையைக் கட்ட முடியாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து விட்டு, அவைகளின் உரிமங்களை ரத்து செய்திருக்கவேண் டும். ஏலத்தில் பங்கேற்ற பிற திறமையான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும் அல்லது மறு ஏலம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏல நிபந்தனைகளை நிறைவேற்றாத தொழில் நிறுவனங்களே குறைந்த கட்டணத்தில் அலை பேசி சேவை யை நடத்த அனுமதிக்கப்பட்டன. இந்த முறை கேடான முன்மாதிரியைத்தான் நானும் கடைப்பிடித்தேன். குற்றம் எதனையும் இழைக்கவில்லை என்ற பல்லவியை கீறல் விழுந்த ஒலி நாடாவைப்போல ஆ.ராசா மீண்டும் மீண்டும் பாடிவந்தார்.

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு ஆதரவாக லாவணி பாடிவந்த தொழில் நிறுவனங்கள், உலகமய, தாராளமயம் கொள்கைகள்தான் லஞ்ச லாவண்ய லைசென்ஸ் பர்மிட் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுத்து விட்டதாக வித்தாரம் பேசிவந்தன. ஆனால் கூர்ந்து கவனித்தால் தாராளமய யுகத்தில் ஊழலுக்கான பாதைகள்தான் மாறியுள்ளன என்றும், அதன் பிரம்மாண்டத்தையும் அது எட்டும் தொலைவையும்தான் அதிகரித்துள்ளன என்கிறார் சுக்லா. ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரம்மாண்டம் சுக்லாவின் கூற்றை மெய்ப்பிக்கிறது அல்லவா? பர்மிட் லைசென்ஸ் ஆட்சி யின் போது லஞ்ச ஊழல்கள் திரை மறைவில் நடைபெற்றன. அவை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் இப்போது இதெல்லாம் சகஜமப்பா என்ற பார்வை அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் மத்தியில் காணப்படுகிறது. அதனை சட்டப் பூர்வமாக்குவதைத் தவிர மற்ற அனைத்தையும் அவர்கள் செய்து விட்டார்கள்.

இந்தியாவில் ஊழலை உச்ச மட்ட அள வுக்கு கொண்டு சென்றது உலகமய, தாராள மயக் கொள்கைகளே என்று குறிப்பிடும் முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல் பின்வருமாறு கூறுகிறார்:- தாராளமயக்கொள்கைகள் பிரம்மாண்டமான ஊழலுக்கு இட்டுச்சென்றுள்ளன. முந்தைய பர்மிட்-லைசென்ஸ் ஆட்சியமைப்பில் ஊழல் என்பது சில்லரை வணிகம் போல நடத்தப்பட்டது. ஏனெனில் அப்போது தனி நபர்கள் உரிமங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். தாராளமயமாக்கல் கொள்கையின் அமலாக்கத்துக்குப்பிறகு பிரம்மாண் டமான ஊழல்கள் மூலம்தான் அரசியல்வாதிகளால் பணம் சம்பாதிக்க முடிகிறது. அதற் கேற்ற வகையில் கொள்கைகளை வகுப்பதன் மூலமே அது சாத்தியமாயிற்று. தாராளமயமாக் கலுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தையே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. எனவே தான் ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்றவர்களின் ஊழலை நாடு எதிர்கொண்டது. நாடும் மக்களும் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமான உலகமயக் கொள்கைகளையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கை களையும் முறியடித்து மக்கள்நலன்களை உயர்த்திப்பிடிக்கும் கொள்கைகளுக்காகப் போராடுவதே நம் முன் உள்ள ஒரேவழியாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக