ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் சாட்டிய தணிக்கை குழுவே அதனை ஊழல் என கூறவில்லை. ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக தான் கூறி இருக்கிறது. அதுவும் ஆதாரத்துடன் கூறவில்லை. பொத்தாம் பொதுவாக தான் குறை சொல்லி இருக்கிறார்கள். இந்த பிரச்சினையில் நடந்தது என்ன என்பது பற்றி அந்த துறைக்கு பொறுப்பு வகிக்க கூடிய மத்திய மந்திரி கபில்சிபலே விளக்கமாக பதில் அளித்து இருக்கிறார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் விடவில்லை. ஏலம் விட்டிருந்தால் கூடுதல் தொகை கிடைத்து இருக்கும் என்பது தணிக்கை துறை கூறி இருக்கும் முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று. செல்போன் பேசினால் ஒரு அழைப்புக்கு 18 ரூபாய், நமது செல்போனுக்கு அழைப்பு வந்தால் 10 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த கால கட்டத்தில் அதனை ஏலம் எடுத்த 2 நிறுவனங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு இதனை உடனே சரி செய்யவேண்டும் என ஆணை வழங்கியதோடு புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையையும் ஏற்படுத்தவேண்டும் என 1999 ம் ஆண்டு உத்தரவிட்டது. அப்போது மத்தியில் இருந்த பாரதீய ஜனதா ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தொழில் நுட்ப கொள்கையை தான் இன்று வரை பின்பற்றி இருக்கிறார்கள்.
அந்த கொள்கையை பின்பற்றியதால் தொலைத்தொடர்பு துறைக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் அந்த இழப்பு என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக தான் நடந்து உள்ளது.
15 ரூபாய் 50 காசுக்கு ஒரு கிலோ அரிசியை வாங்கி தான் குடும்ப அட்டைக்கு வழங்கும் போது ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறோம். இதில் மானியம் போக ஆண்டுக்கு எத்தனை கோடி இழப்பு ஏற்படுகிறது தெரியுமா? இந்த இழப்பிற்கு பெயர் ஊழலா? மக்களுக்கு போய் சேருகிற பயன் சாதனையாக தான் நாங்கள் அதனை கருதுகிறோம்.
ஊழல், ஊழல் என்று யார் சொல்வது? பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஆஜர் ஆகாமல் வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதாவா சொல்வது? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கரூர் திருவள்ளுவர் திடலில் தி.மு.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,
பல மக்கள் நல திட்டங்களை ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே நிறை வேற்றி வரும் இந்த ஆட்சியை தான் அகற்றிட வேண்டும், ஒழித்திடவேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் அரசின் திட்டங்களில் குறை கண்டு பிடிக்க முடியாததால் சில சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து கொண்டு 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் சாட்டிய தணிக்கை குழுவே அதனை ஊழல் என கூறவில்லை. ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக தான் கூறி இருக்கிறது. அதுவும் ஆதாரத்துடன் கூறவில்லை. பொத்தாம் பொதுவாக தான் குறை சொல்லி இருக்கிறார்கள். இந்த பிரச்சினையில் நடந்தது என்ன என்பது பற்றி அந்த துறைக்கு பொறுப்பு வகிக்க கூடிய மத்திய மந்திரி கபில்சிபலே விளக்கமாக பதில் அளித்து இருக்கிறார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் விடவில்லை. ஏலம் விட்டிருந்தால் கூடுதல் தொகை கிடைத்து இருக்கும் என்பது தணிக்கை துறை கூறி இருக்கும் முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று. செல்போன் பேசினால் ஒரு அழைப்புக்கு 18 ரூபாய், நமது செல்போனுக்கு அழைப்பு வந்தால் 10 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த கால கட்டத்தில் அதனை ஏலம் எடுத்த 2 நிறுவனங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு இதனை உடனே சரி செய்யவேண்டும் என ஆணை வழங்கியதோடு புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையையும் ஏற்படுத்தவேண்டும் என 1999 ம் ஆண்டு உத்தரவிட்டது. அப்போது மத்தியில் இருந்த பாரதீய ஜனதா ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தொழில் நுட்ப கொள்கையை தான் இன்று வரை பின்பற்றி இருக்கிறார்கள்.
15 ரூபாய் 50 காசுக்கு ஒரு கிலோ அரிசியை வாங்கி தான் குடும்ப அட்டைக்கு வழங்கும் போது ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறோம். இதில் மானியம் போக ஆண்டுக்கு எத்தனை கோடி இழப்பு ஏற்படுகிறது தெரியுமா? இந்த இழப்பிற்கு பெயர் ஊழலா? மக்களுக்கு போய் சேருகிற பயன் சாதனையாக தான் நாங்கள் அதனை கருதுகிறோம்.
ஊழல், ஊழல் என்று யார் சொல்வது? பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஆஜர் ஆகாமல் வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதாவா சொல்வது? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக