நல்ல விஷ்யம் ஒன்று நடந்தால், இலவச இணைப்பாக கெட்ட விஷ்யமும் சேர்ந்து நடப்பது உலக இயல்பு.
இதைத்தான் அமிர்தம் தேடும்போது நஞ்சும் சேர்ந்து கிடைத்ததாக சொல்வார்கள்.
எகிப்தில் மக்கள் புரட்சி வென்றது நல்ல விஷ்யம். ஆனால் அதற்கு பின் நடக்கும் சில விஷ்யங்கள் இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கின்றன. எனவே ஆன்மீகவாதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான தர்காக்கள் இடிக்கப்படுகின்றன.
இதை செய்வது மாற்று மதத்தினர் அல்லர்.. இஸ்லாம் சொல்வதை முழுதும் அறியாமல் , இஸ்லாமியர்கள் சிலரே இந்த கொடும் செயலை செய்வதுதான் இதில் இருக்கும் வேதனை
"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் வேதனையுடன் கூறினார்..
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது, "தர்காக்களை அகற்ற அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். ” என்றார்
பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது.
அல்லாவின் பாதையில் நடந்து வாழ்ந்து காட்டிய மகான்களின் அடக்க ஸ்தலம்தான் தர்க்கா. சாதாரணமாக இறப்பது வேறு.. அவர்கள் நிலை வேறு என்கிறது புனித நூலான அல்குர் ஆன் ..
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர்களை இறந்தோர் என சொல்லாதீர்கள். அவர்கள் உயிருடன் தான் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள் - அல்குர் ஆன் 2.154
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர்களை இறந்தோர் என எண்ணாதீர்கள். அவர்கள் இறைவனிடம் உயிருடன் தான் உள்ளனர்.உணவளிக்கப்படுகின்றனர் - அல்குர் ஆன் 3.169
ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் சொல்லுவார்.அதன் பின்னர் “ புது மணமகனைப்போல நீ உறங்கு. அல்லாஹ் உன்னை எழுப்பும்வரை உறங்கு “ என சொல்லப்படும் என நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
ஆதாரம் :
அஹ்மத் , திரிமதீ நூல்கள்
அல்லாவை தவிர யாரையும் வணங்க கூடாது என்பது இஸ்லாம் நெறி. எனவே மகான்களை வணங்குதல், அவர்கள் அற்புதங்கள் செய்வதாக சொல்வது எல்லாம் தவறு என நினைக்கின்றனர் சிலர். ஆனால், இது போன்ற அற்புதங்களுக்கு குர் ஆனிலேயே சான்றுகள் இருக்கின்றன.
அதே போல ஒரு மகான் அற்புதம் செய்கிறார் என்றால் அதற்கு காரணம் அல்லாஹ்தான்.. எனவே இவற்றை மறுப்பது இறைவனையே மறுப்பது போலாகும் என்பது இவர்களுக்கு புரியவில்லை..
எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பம் இன்றி அற்புதம் நடத்த முடியாது .ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது - அல்குர் ஆன் 13.18
நாங்கள் உங்களை போன்ற மனிதர்கள்தான், ஆயினும் த்னது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லா அருள் புரிகிறான். அல்லாஹ் விருப்பம் இன்றி எந்த ஓர் அற்புதத்தையும் எங்களால் கொண்டு வர முடியாது - அல்குர் ஆன் 14.11
அல்லாஹ்வை அஞ்சி கொள்ளூங்கள். ஒரு வஸீலாவை தேடிக்கொள்ளுங்கள் அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்- அல்குர் ஆன் 5.35
அடக்கஸ்தலங்களுக்கு செல்லுமாறுதான் இஸ்லாம் சொல்கிறதே தவிர , அதை இடிக்குமாறு சொல்லவில்லை..
எனவே இது போன்ற செயல்களில் - தர்க்காக்களை இடிப்ப்து போன்றவற்றில் ஈடுபடுவது - இஸ்லாம் நெறிக்கு விரோதமானது என இஸ்லாம் அறிஞர்கள் கருதுகின்றனர்..
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்ய நான் தடை செய்திருந்தேன். முஹம்மத் தன் தாயாரின் கப்ரை ஸியாரத் செய்ய அனுமதிக்கப் பட்டுவிட்டார். எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதாரம்: திர்மிதி 974
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது.
இப்னு மாஜா - 1569, மிஷ்காத் - 154
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள்.
புரைதா ரலியல்லாஹு அன்ஹு
முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.
தபரானி 3 - 241
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுபடுத்தும்.
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉக்குச் சென்று ஸியாரத் செய்து அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொருக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டர்வர்களாக இருந்தார்கள்.
முஸ்லிம் 1 - 313, மிஷ்காத் 154
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.
பைஹகி, மிஷ்காத் - 154
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்பொழுது தங்களின் திரு முகத்தை கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி சலாம் கூறினார்கள்.
மிஷ்காத்: 2 – 407
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.
முஸ்லிம், மிஷ்காத் - 154
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் 4 – 382
ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.
மிஷ்காத் – 154
அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததார்கள்.
முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3-572, முஸ்தத்ரக் 1-377
மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்று ஜியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள்.
அபி முலைகா ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் - 149 முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3 - 5079

i thought your web blog going right path but its same like darga worship quran not says visit grave its says GRAVE YARD check & read quran properly
பதிலளிநீக்குதர்ஹாக்களை தரைமட்டமாக்குங்கள்
பதிலளிநீக்குhttp://silaiyumkaburum.blogspot.com/2013/05/dargakkalai-tharai-mattamaakkuvom.html
ஷுஹதாக்கள் என்றும் உயிர் வாழும் தியாகிகளாயிற்றே!!!
பதிலளிநீக்குhttp://silaiyumkaburum.blogspot.com/2013/06/shuhathakkal-uyirudan-ullanara.html
தியாரத் செய்ய குர்ஆன் ஹதீஸ் சொல்லவில்லையா ?
பதிலளிநீக்குhttp://silaiyumkaburum.blogspot.com/2013/02/ziyarath-seyya-quran-hadees-sollavillaya.html