ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறையில் கனிமொழியின் முதல்நாள் இரவு கழிந்தது


புதுதில்லி, மே.21: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி எந்தவித வசதிகளும் இன்றி நேற்று இரவு படுத்துறங்கினார்.வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ட அவர் இரவு 11.30 மணியளவில் சிறையில் தான் அடைக்கப்பட்ட அறையில் படுத்துறங்கினார். அந்த அறையில் குளிர்சாதன வசதிகள் எதுவும் இல்லை.இன்று காலை 5.30 மணிக்கு கண்விழித்த கனிமொழி வீட்டு உணவு எதுவும் இல்லாததால் சிறை உணவை உட்கொண்டார். அவருக்கு 2 ரொட்டித் துண்டுகளும், உருளைக்கிழங்கு குருமாவும் வழங்கப்பட்டன. அவற்றை உண்ட பின்னர் 9.30 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக