ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மத்திய அரசின் 2-வது ஆண்டு நிறைவு விருந்து: கருணாநிதி பங்கேற்பாரா?



புது தில்லி, மே 20: மத்திய அரசின் இரண்டாவது ஆண்டு நிறைவு விருந்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்து இரண்டு ஆண்டு காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக ஞாயிற்றுக்கிழமை (மே 22) இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த விருந்தில் கலந்துகொள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் எம்.பி.க்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. திமுக சார்பில் இந்த விருந்தில் அக் கட்சியினர் கலந்துகொள்ளவிருப்பதாகவும் ஆனால் கட்சியின் தலைவர் கருணாநிதி பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. ÷மு.க.ஸ்டாலின் தலைமையிலோ அல்லது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையிலோ திமுக எம்.பி.க்கள் விருந்தில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல், ஆண்டுதோறும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த பட்டியலை வெளியிட, அதைப் பிரதமர் மன்மோகன் சிங் பெற்றுக்கொள்வது வழக்கம்.  பொதுவாக இந் நிகழ்ச்சியில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேடையில் ஒன்றாக அமரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். கனிமொழி தில்லியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடைபெறும் இந்த விருந்தில் கருணாநிதி பங்கேற்பதைத் தவிர்ப்பார் என்றே தெரிகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக