பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இன்று இஸ்ரேலின் விமானப் படை நடத்திய உக்கிரமான தாக்குதலில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முதல் கடுமையான வான் தாக்குதலை நடத்தி வருகிறது.
60க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதியான அகமது ஜபாரி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.அவர் பயணித்துக் கொண்டிருந்த காரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விமானத் தாக்குதலிலேயே ஜபாரி உயிரிழந்துள்ளதாகவே இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளின் பின்னணியில் ஜபாரி இருந்தாகவும் அதன் காரணமாக தாம் அவரை இன்று இலக்கு வைத்து தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் தொடர்ச்சியான வான் தாக்குதலை நடத்தி வருகிறது.
குழந்தைகள் பலி
இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹமாஸ் இயக்க அமைச்சர் முஃபித், இஸ்ரேலின் வான் தாக்குதலில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்திருக்கின்றனர் என்றனர்.
இதேபோல் 120க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வீசித் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
(படத்தில்.. கார் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள்)
உயிரிழந்த ஜபாரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக