இலங்கை எரிபொருள் நிறுவனத்துக்கு பணம் செலுத்தாததால் போக்குவரத்திற்கு பயன்பட்ட ஸ்காட்டியா பிரின்ஸ் என்கிற கப்பல் இலங்கை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதாக ஃபிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கே.திம்மையா தெரிவித்துள்ளார். உரிய தவணையைச் செலுத்திய பிறகும் எரிபொருள் நிறுவனம் நீதிமன்றத்துக்குச் சென்றிருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படியே ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் திம்மையா கூறினார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக