இந்நிறுவனம் தான் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 1984ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமாகும். இந்த விபத்தில் 25 ஆயிரத்திற்கு அதிகமானோர் இறந்தனர்.இதனை மேற்கோள் காட்டி கடந்த வாரம் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டியினை இந்தியா புறக்கணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் ஒலிம்பிக் அமைச்சர் டீஸ்டா ஜோவெல், இந்த வாரம் இந்தியா வரவுள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டி குறித்து இந்திய விளையாட்டு அமைப்புகளான அத்லடிக் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இந்திய ஒலிம்பிக் சங்கமும் லண்டன் ஒலிம்பிக்கை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இன்டிபென்டன்ட் எனும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக