2009 இல் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கு வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் கணக்கீடு உதவும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கூறியுள்ளார்.
போரில் இறந்தவர்கள் காணாமற் போனவர்கள் தொடர்பான கணக்கீட்டை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள தகவல் குறித்தே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ போரின் இறுதிக்கட்டம் பற்றிய துல்லியமான தகவல்களைத் திரட்டுவதற்கு இந்தக் கண்கீடு உதவியாக அமையும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளில் சிறிலங்கா முன்னே செல்ல முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்காக ஜப்பான் காத்திருக்கிறது.
சிறிலங்காவின் அமைதி முயற்சிகள் தொடர்பாக நோர்வே வெளியிட்ட மீளாய்வு அறிக்கையை முற்றிலுமாக வாசிக்கவில்லை.
ஆனாலும் அறிக்கையின் முக்கிய பகுதிகளை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த அறிக்கையின் கண்டறிவுகள் தொடர்பாக கருத்து வெளியிட முடியாது.
ஆனால் இதில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியும், சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.
இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக செயற்பட்ட ஜப்பான், அமைதி முயற்சிகளின் வகித்த பங்கு தொடர்பாக இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனத்தை ஏற்க முடியாது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக யசூசி அகாசி நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக