சிறுவர் பாடசாலையில் சக மாணவன் கீறிய படம் ஒன்றைக் கிழித்து விட்டதாக ஆசிரியை கூறியதை அடுத்து, Bastien எனும் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு மிருகத் தனமான தண்டனை கொடுத்துள்ளான் அந்தத் தந்தை. உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்து மூடி இயந்திரத்தினை இயக்கியுள்ளான். தாய் வந்து இயந்திரத்தை நிறுத்தியபோது குழந்தை முற்றாகக் குளிர்ந்து போயிருந்தது.
உடனடியாக அயலிலிருந்த Alice எனும் பெண்மணியிடம் ஓடிச் சென்ற தாய் குழந்தை மாடிப் படியிலிருந்து கீழே விழுந்து விட்டதாகக் கூறியுள்ளார். Alice கூறுகையில் தன் கையில் தந்த போது ஒரு பிழிந்து எடுக்கப்பட்ட ஒரு பொம்மை போலவே அந்தக் குழந்தை கிடந்தது. எனது கையிலேயே அந்தப் பிஞ்சின் கடைசி இதயத்துடிப்பு நின்றது என்று கூறினார்.
ஆனாலும் சிறுவனின் 5 வயது அக்கா MAUD பல உண்மைகளை Alice இடம் போட்டுடைத்து விட்டாள். தந்தை உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் இருந்து தம்பியை எடுத்து போதே தம்பி பேச்சு மூச்சில்லாமலே கிடந்ததாகவும், தந்தை தான் தம்பியை உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்துத் துவைத்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
மேலும் தந்தை தம்பியை மிகவும் மோசமாகத் தண்டிப்பதாகவும் பல முறை அலமாரியினுள் வைத்துப் பூட்டி விடுவதாகவும் கூறினாள். Alice கூடத் தனது சாட்சியத்தில், ஒரு முறை இறந்த குழந்தையின் தந்தை அந்தப் பாலகனை ஒரு போர்வையில் முழுவதுமாகச் சுற்றி பல்கனியில் வைத்துவிட்டுக் கதவைக் பூட்டிவிட்டான்.
பின்னர் தான் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த படியால் குழந்தையை மீண்டும் அவர்கள் உள்ளே எடுத்தார்கள் என்று கூறினார். இறந்த குழந்தையின் தாயான Charlène இன் தாயார் கூறுகையில் இந்தக் குழந்தை பிறந்தது தனது மகளுக்கும் அவளது கணவனுக்கும் விருப்ப மில்லாததாகவே இருந்தது என்றார்.
கர்ப்பக் காலத்திலேயே தன்னிடம் மறைத்தே வைத்திருந்ததாகவும் பின்னர் குழந்தை பிறந்த போது அந்தக் குழந்தை தனக்கு வேண்டாம் என மகளின் கணவர் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் இப்படிக் கொடுமையை அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு கொடுமையை அவன் செய்வானென்று தான் நினைத்தே இருக்கவில்லை என்றும் கூறினார்.
தந்தையை '15 வயதிற்குக் குறைவான ஒருவரைக் கொலை செய்த கடுமையான குற்றத்திற்காக கைது செய்துள்ளனர், தாயைக் கொலைக் குற்றத்திற்கும் குற்றச்செயல்களுக்கும் துணைபோன குற்றம் மற்றும் ஆபத்திலிருந்தவரைக் காப்பாற்றாத குற்றம்' போன்றவற்றிற்ககாவும் கைது செய்துள்ளனர்.
இப்படியான கொடுமைகள் புரிந்த மனித மிருகங்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் முறையால் இப்படியான கொடுமைகளை யாரும் கற்பனை கூடச் செய்து பார்க்கக்கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக