ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிக அளவு சுயேச்சைகள் போட்டியிடுவதால் கட்சிகள் திணறல்

:உள்ளாட்சித் தேர்தலில் பல முனைப் போட்டி உருவாகியுள்ளதால், கூட்டம் சேர்க்க ஆள் கிடைக்காமல், கட்சிகள் திண்டாடுகின்றன.
தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,-தி.மு.க.,- காங்., - தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்டுகள், பா.ஜ.,- பா.ம.க.,- வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தனித்தனியே போட்டியிடுகின்றன.

பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள், பிரசாரத்துக்காக செல்லும் போது, தங்களுடன் கட்சியினரின் கூட்டத்தை கூட்டிச் சென்றால்தான், பிரசாரம் களைகட்டும்.
இதற்காக, கட்சியினர் சிலருடன், நாள் கூலிக்கு ஆட்களை பேசி, அவர்களுக்கு நாள் சம்பளம் போக, குவார்ட்டர், பிரியாணி நிச்சயம் வழங்கப்படும். இம்முறை பல முனை போட்டியிருப்பதால், ஒவ்வொரு கட்சியினரும் ஆட்களைத் தேட வேண்டியுள்ளது.
கிடைத்த வரைக்கும் ஆட்களிடம், மொத்தமாக குறிப்பிட்ட நாட்களுக்கு ஒப்பந்தம் போல் செய்து, அவர்களை கைவசம் வைத்துக் கொள்கின்றனர்.

அதோடு, ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியே வேட்பாளர்கள் நிற்பதால், அவர்களும் அப்பகுதியை சேர்ந்தவர்களை தயார் செய்து, பிரசாரத்துக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனால், மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு, தங்கள் கட்சித் தொண்டர்கள் கூட போதுமான அளவு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதான கட்சிகளான, அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள், தினக்கூலியை உயர்த்தி, ஒரு நபருக்கு குவார்ட்டர், பிரியாணியுடன், 300 ரூபாய் வரை அளித்து ஆட்களை தக்க வைத்துக் கொள்கின்றனர். காங்.,- தே.மு.தி.க.,- பா.ம.க., போன்ற கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றிவாய்ப்பை பெறாவிட்டாலும், தங்கள் பலத்தை காட்ட ஓரளவு கவுரவமான ஓட்டுக்களை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களும் பிரதான கட்சிகளுக்கு இணையாக தொகையை செலவழித்து, பிரசாரத்துக்கு ஆட்களை அழைத்துச் செல்கின்றனர்.
எனினும், முழுமையான அளவில் ஆட்கள் கிடைப்பதில்லை. பலமுனை போட்டியால் எஞ்சியுள்ள பிரசார நாட்களிலும், கட்சிகளுக்கு சப்பைக்கட்டு கட்டும், "குடிமகன்'களுக்கு நல்ல ஆபர் கிடைத்துள்ளது.-நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக