கமல்ஹாசன் கவுர வேடத்தில் நடித்த மலையாள படம், 4 ப்ரெண்ட்ஸ்.' இந்த படத்தில் அவருடன் ஜெயராம், ஜெயசூர்யா, மீராஜாஸ்மின் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சாஜி சுரேந்திரன் டைரக்டு செய்துள்ளார்.
இந்த படத்தை, அன்புள்ள கமல்' என்ற பெயரில், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார், பிரதீப். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை, கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:
அன்புள்ள கமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படவிழாவில் கலந்துகொள்ள எனக்கு அதிக உரிமை இருக்கிறது. கமல்ஹாசன் பிறப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகிவிட்டது.
யாராவது 100 படங்களை பார்த்தவர்கள் இருக்கிறீர்களா? அல்லது ஒரே படத்தை 100 தடவை பார்த்தவர்கள் இருக்கிறீர்களா? நான் பார்த்து இருக்கிறேன். அது, கமல்ஹாசன் நடித்த முதல் படம், களத்தூர் கண்ணம்மா.'
கமல்ஹாசனை குழந்தையாக தூக்கிக்கொண்டு தியேட்டர், தியேட்டராக போனேன். எல்லா தியேட்டர்களிலும் அந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன். என் தம்பியை முதன்முதலாக திரையில் பார்த்தபோது, ஆனந்த கண்ணீர் விட்டேன்.
அதுபோல் ஒரு படம் வெற்றி பெற்றால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆனந்த கண்ணீர் வரவேண்டும்.'' இவ்வாறு சாருஹாசன் பேசினார்.
இது, புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 4 நண்பர்களை பற்றிய படம். உயிருக்கு கெடு வைக்கப்பட்ட அந்த 4 பேர்களின் கவலைகளை போக்கி, உற்சாகமூட்டுகிற வேடத்தில் கமல்ஹாசன் நடித்து இருக்கிறார். படத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. சமூக கருத்துள்ள படம் என்பதால், இலவசமாக நடித்துக்கொடுத்தார்.
இந்த படத்தை, அன்புள்ள கமல்' என்ற பெயரில், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார், பிரதீப். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை, கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:
அன்புள்ள கமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படவிழாவில் கலந்துகொள்ள எனக்கு அதிக உரிமை இருக்கிறது. கமல்ஹாசன் பிறப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகிவிட்டது.
யாராவது 100 படங்களை பார்த்தவர்கள் இருக்கிறீர்களா? அல்லது ஒரே படத்தை 100 தடவை பார்த்தவர்கள் இருக்கிறீர்களா? நான் பார்த்து இருக்கிறேன். அது, கமல்ஹாசன் நடித்த முதல் படம், களத்தூர் கண்ணம்மா.'
கமல்ஹாசனை குழந்தையாக தூக்கிக்கொண்டு தியேட்டர், தியேட்டராக போனேன். எல்லா தியேட்டர்களிலும் அந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன். என் தம்பியை முதன்முதலாக திரையில் பார்த்தபோது, ஆனந்த கண்ணீர் விட்டேன்.
அதுபோல் ஒரு படம் வெற்றி பெற்றால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆனந்த கண்ணீர் வரவேண்டும்.'' இவ்வாறு சாருஹாசன் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக