ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மரதன் ஓட்டம் ஓடும் 100 வயது தாத்தா

பிரித்தானியாவைச் சேர்ந்த 100 வயதான தாத்தா ஒருவர் கனடாவின் தலைநகரான டொரண்டோவில் மரதன் ஒட்டத்தை முடித்துள்ளார். இவர்தான் உலகின் அதி வயதுகூடிய மரதன் வீரர் என்ற பெருமையையும் தட்டிக் கொண்டுள்ளார். இவரின் பெயர் பெளஜா சிங்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஓடிய சிங் 8 மணி நேரம், 25 நிமிடங்கள், 16 நொடிகளில் 26 மைல் தூரம் மரதன் ஓட்டத்தை ஓடி முடித்துள்ளார்.

தனது மனைவி, மகனின் இறப்பின் பின்னர் 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடத்தொடங்கிய சிங் ஒவ்வொரு நாளும் 10 மைல் தூரம் ஓடியுள்ளார். இவர் தினமும் இஞ்சியால் செய்த குழம்பையும், தேநீரையுமே பிரதானமாகக் கொண்டுள்ளார். தான் எப்போதும் சந்தோசமாக இருப்பதே வெற்றியின் ரகசியம் என்றும் குறிப்பிட்டள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக