ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காந்தி ஜெயந்தி

தேசப் பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 143வது பிறந்தநாள் விழா நாடெங்கும் சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 
தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலை மாலை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 
சிலையின் பீடத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையும், மலர் அலங்காரத்துடன் வைக்கப்பட்டிருந்தது. 
இன்று காலை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகைத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், தலைமை செயலாளர் தீபேந்திரநாத் சாரங்கி, செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் ஆகியோர் வரவேற்றனர். 
சரியாக 9 மணியளவில் அங்கு வருகை தந்த தமிழக கவர்னர் ரோசய்யாவை முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார். பின்னர் முதல்வரும், கவர்னரும் அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு கீழ் இருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
இதையடுத்து காந்தி சிலை முன்பாக சர்வோதய மாணவமாணவிகள் பிரார்த்தனை பாடல்களை பாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து இருவரும் அங்கு அமர்ந்து பிரார்த்தனையில் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக