உலககையே தன்வசப்படுத்தும் 30வது ஒலிம்பிக் போட்டிகளை நாடத்துவதற்கு லண்டன் ஆயத்தமாக உள்ளது.
2012 ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி 30வது ஒலிம்பிக் ஆரம்பமாக உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் துரிதகதியில் இடம் பெற்று வருகின்றது.
அந்தவகையில் இதன் ஆரம்ப விழாவில் இசையமைபதற்கென இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.றஹ்மானின் இசைக்குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
போட்டிகளை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகள் 90 வீதமானவை நிறைவடைந்துள்ளது. 1952 கோடி ரூபா செலவில் இந்த அரங்கு நிர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆரம்ப விழாவுக்கான அரங்கில் சுமார் 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுவருகின்றது.
இதன் கட்டுமானம் அனைத்தும் 2012 மார்ச் மாதத்தில் நிறைவடைந்து விடும் என்று இங்கிலாந்து ஒலிம்பிக் சபை குறிப்பிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.றஹ்மானின் இசையுடன் ஆரம்பிப்பதைப் காண உலகமே எதிர்பார்ப்புடன் கார்த்திருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக