ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2011ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல்பரிசுக்கு அரேபியஎழுச்சிகான செயற்பாட்டாளர்களின் பெயர் முன்மொழியப்படலாம்.


2011ம் ஆண்டின் சமாதானத்துக்hன நோபல்பரிசுக்கு வடஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் அரேபியஎழுச்சி செயற்பாட்டாளர்களின் பெயர் முன்மொழியப்படலாம் என ஒஸ்லோவின்செய்தியொன்று தெரிவிக்கின்றது.எகிப்தின் இணையச் செயற்பாட்டாளரும்
, கூகிள் நிறுவனத்தின் செயற்குழுஅதிகாரியுமான வஹீல்குனீம், எகிப்தின் ஏப்ரல்6 இளைஞர்ஒன்றியத்தின் தலைவர்களில் ஒருவரான இஸ்ராஅப்துல் பத்தாஹ்,டியூனிசியாவின் புலோக்கர் இணையசெயற்பட்டாளர்களில் ஒருவரான லீனா பின் மெஹ்னி போன்றவர்களின் ஒருவரின் பெயர் எதிர்வரும் ஒக்டோபர்மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இவ்வருட சமாதானத்துக்கான நோபல்பரிசுக்கான நபரைஅறிவிக்கும் கூட்டத்தில், அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
இவ்வருடம் முதல் அரபுலகில் நடைபெற்றுவரும் ஜனநாயாக ஆர்ப்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர்.  இவர்கள் ஆட்சியாளர்களுக்குசவால்விடும் படியாக தமது ஆர்ப்பாட்டங்களை நடாத்திச் செல்கின்றனர். டியூனிசியாவின் ஸைன்பின் ஆப்தின் பின் அலி,எகிப்தின் ஹூஸ்னி முபராக் போன்றோர்,ஜனநாயக ஆர்ப்பாட்டங்களின் மூலம் தமது பதவிகளை இழந்துள்ளனர்.மேலும் லிபியா,சிரியா மற்றும் யெமன் ஆகிய நாடுகளில் தற்போது மக்கள் புரட்சி நடந்துகொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக