தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மாஸ்மாக் அரசு நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 6696 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 20 ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைக்கிறது. நேற்று முதல் மது பாட்டில்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
குவாட்டர் பாட்டில் ரூ.5, ஆப் பாட்டில் ரூ.10, முழுபாட்டில் ரூ.20, பீர் வகைகள் ரூ.5 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. விஸ்கி, பிராந்தி, ரம், பீர் உள்ளிட்ட அனைத்து மது பானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த நிலையில் மேலும் 280 மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் புதிய கடைகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர எலைட் ஷாப் எலைட் பார் என்று சொல்லக்கூடிய புதிய நவீன கடைகளும் திறக்க முடிவு செய்துள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் போன்ற நகரங்களில் இந்த புதிய கடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
உயர்தர மதுபானங்கள், வெளிநாட்டு மதுவகைகள் இந்த கடைகளில் கிடைக்கும். இந்த கடைகளுக்கு அருகில் மது அருந்த பார் வசதியும் அளிக்கப்படுகிறது. முழுவதும் குளு குளு வசதியுடன் சுகாதாரமான முறை நவீன பார் அமைக்கப்படுகிறது.
சென்னையில் ஏற்கனவே ஸ்பென்சர் பிளாசா, அண்ணாநகர் சிந்தாமணியில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றை குடிக்க பார் வசதி அளிக்கப்படவில்லை. டாஸ்மாக் புதிதாக தொடங்கப்படும் ஏ.சி.பாரில் கழிப்பிட வசதி, டேபிள், புகைபிடிக்க தனி அறை போன்றவை இடம் பெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக