சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில், சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும் என்றும், 22ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்வி திட்ட புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும்,
அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் பழைய பாடத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தடையும் விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வி பாடங்களில் உள்ள குறைகளை களைய குழு அமைக்கலாம் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பால் கடந்த இரண்டு மாதமாக நீடித்து வந்த குழப்பம் நீங்கியது. இந்நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் வகுப்புகள் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக