கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிந்துள்ளது. சாம்பார் வெங்காயம், கேரட், உருளை கிழங்கு, அவரைக்காய் ஆகியவை விலை குறையவில்லை. மற்ற காய்கறிகள் அனைத்தும் விலை குறைந்துள்ளது. விலை விவரம் வருமாறு:-
கத்தரி ரூ.5 முதல் 7 வரை
வெண்டைக்காய் ரூ.8 முதல் 10 வரை
மிளகாய் ரூ.8 முதல் 10 வரை
பீட்ரூட் ரூ.8 முதல் 9 வரை
கேரட் ரூ.18 முதல் 20 வரை
பீன்ஸ் ரூ.12 முதல் 13 வரை
கோஸ் ரூ.3 முதல் 4 வரை
முள்ளங்கி ரூ.3
உருளை கிழங்கு ரூ.9 முதல் 10 வரை
பல்லாரி ரூ.12
இஞ்சி ரூ.20 முதல் 35 வரை,
சாம்பார் வெங்காயம் ரூ.28 முதல் 30 வரை
நூக்குள் 10 முதல் 12 வரை
தக்காளி ரூ.7 முதல் 10 வரை.
காய்கறிகள் விலை வீழ்ச்சிக்கு காரணம் வரத்து அதிகரிப்புதான் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். தினமும் 450 லாரிகளில் காய்கறிகள் வந்து குவிகிறது. கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
மார்க்கெட்டை சுற்றி இருக்கும் ரோட்டில் வெளி மாநில பஸ்கள், ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காய்கறி லாரிகள் உள்ளே வர முடியாமல் மணிக்கணக்கில் ரோட்டில் நிற்கிறது.
அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சில்லரை வியாபாரிகளும், வெளியூர் வியாபாரிகளும் காய்கறி வாங்கி செல்வார்கள்.அந்த நேரத்தில் கடைகளில் இருப்பு குறைவாக இருப்பதால் விலை அதிகமாக விற்கப்படுகிறது. காய்கறிகள் இறக்கப்பட்டதும் மாலையில் விலை குறைத்து விற்கப்படுகிறது என்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக