ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

விபத்தில் கணவர் பலி. மனைவியையும் உயிரோடு புதைக்க பார்த்த கணவரின் குடும்பம். இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்.


ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சும், வேனும் மோதிக்கொண்டன. இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பேரும், வேனில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேரும் காயம் அடைந்தனர்.இதில் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் லகன்சிங், பீபல்சிங் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியில் பீபல்சிங் இறந்தார்.

 இவர் மத்தியபிரதேசம் மாநிலம் சத்தான மாவட்டம் நகோடு தாலுகா சித்துபுராவை சேர்ந்த நிக்குசிங் என்பவரின் மகன் ஆவார். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தபோது விபத்தில் சிக்கி இறந்து போனார். இவருடைய மனைவி வீராபதி (வயது27), மகன் அனில்(3), 5 மாத குழந்தை பாதல், மகள் பூனம்(7) ஆகியோர் காயமடைந்தனர்.  
 பீபல்சிங்கின் உடலை பெற அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ராமநாதபுரம் வந்தனர். அவர்கள் பீபல்சிங்கின் உடலை பெற்றுக்கொண்டு வீராபதி மற்றும் குழந்தைகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர்.
ஆனால் வீராபதி தனது குழந்தைகளை கட்டி அணைத்துக்கொண்டு வரமுடியாது என கூறினார். அவர்கள் வீராபதியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கவே கதறி அழுதார்.
 பின்னர் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்டு அழுதுகொண்டே ராமநாதபுரம் டவுன் போலீஸ்நிலையத்துக்கு ஓடி வந்து தஞ்சம் அடைந்தார். அங்கு, "போலீசாரிடம் காப்பாற்றுங்கள் காப்பாற்றுகள்'' என்று இந்தியில் அலறினார். 
 "ஏன் கணவர் வீட்டாருடன் செல்ல மறுக்கிறாய்?'' என்று அவரிடம் போலீசார் கேட்டபோது வீராபதி கூறிய பதில் போலீசையே அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:- 
 "எங்கள் குல வழக்கப்படி கணவர் இறந்துவிட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும். இறந்த கணவருடன் சேர்த்து வீட்டின் பின்புறம் என்னையும் உயிரோடு புதைத்து விடுவார்கள்.
குழந்தைகள் இருந்தால் கணவரின் பெற்றோர் தான் அவர்களை வளர்ப்பார்கள். என்னையும் என் கணவரோடு புதைக்கவே வருமாறு வற்புறுத்தி அழைக்கிறார்கள்.
 எனது கணவர் இறந்தாலும் எனது பிள்ளைகளை நான்தான் வளர்ப்பேன். அவர்களுக்காக நான் உயிர்வாழ வேண்டும். எனவே என்னை அவர்கள் பிடியில் இருந்து காப்பாற்றுகள். நான் எனது தந்தை ராம்ஜிலாலுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அவர் வந்து என்னை அழைத்துச் செல்வார்.''
இவ்வாறு அவர் கூறினார்.
 இதனை அடுத்து வீராபதியை அவருடைய மாமனார் குடும்பத்தினருடன் அனுப்ப போலீசார் மறுத்துவிட்டனர். மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பிவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக