ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சவுதி பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்.பாதுகாவலர்கள் தாக்குதலில் 12 பேர் காயம். (படங்கள்)

சவுதி அரேபியாவில் பெண்கள் பல்கலைக்கழக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சவுதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றான கிங் காலித் பல்கலைக்கழகத்தில் பெண்கள் அதிகளவில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் சுகாதாரமின்மையை கண்டித்து கடந்த புதன்கிழமை மாணவிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது பாதுகாவலர்கள் தாக்கிய சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
இருப்பினும் பல்கலை நிர்வாகம் வளாகத்தில் துப்புரவு பணியை மேற்கொள்ள எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.
இதனால் சனிக்கிழமை துர்நாற்றம் அதிகமாகவே மாணவிகள் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக அதே பல்கலைக்கழகத்தின் ஆண்கள் பிரிவினரும் களம் இறங்கினர்.
இதை தொடர்ந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ள அசீர் மாகாண துணை கவர்னர் அப்தெல் கரீம் அல் ஹுனானி உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
சவுதி அரசு கல்விக்காக அதிக அளவில்செலவு செய்து வரும் நிலையில் 30 வயதுக்குட்பட்ட சுமார் 19 மில்லியன் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக