ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரும் தோல்விக்கு பிறகு தி மூ கவின் முதல்வெற்றிசமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை: அதிமுக அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வி சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது. சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் வரும் 22-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை அனுப்ப வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாநில பாட திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் என்று பல்வேறு பாட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.

எல்லாருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கும் வகையில் சமச்சீர் கல்வி சட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் இரண்டும், தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தன. இதைத் தொடர்ந்து 1, 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாட திட்டம் கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக ரூ.200 கோடி செலவில் புதிய பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் அமைச்சரவை கூடி சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதையடுத்து, சட்டசபையில் உடனடியாக சமச்சீர் கல்வி திருத்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை ஐகோர்ட் விசாரித்து, சமச்சீர் கல்வி திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. தடையை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என உத்தரவிட்டது.

மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி குறித்து உயர்நிலை கமிட்டி அமைத்து ஆய்வு செய்து, அறிக்கையை 3 வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் மீது சென்னை ஐகோர்ட் ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, தலைமைச் செயலர் தலைமையில் 9 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. இந்த உயர்நிலை கமிட்டி கூடி விவாதித்து அறிக்கை தயாரித்தது. சமச்சீர் கல்விக்காக உருவாக்கப்பட்ட பாட புத்தகங்கள் தரமற்றவை. இந்த புத்தகங்களை பயன்படுத்தினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு வக்கீல்களின் வாதங்கள் முடிந்து, கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பகல் 12.47 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம். சட்டத் திருத்தம் கொண்டு வந்து பழைய பாடதிட்டம் தொடரும் என அறிவித்தது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த புத்தகம் படிக்க வேண்டும் என தொடர்ந்து மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, இந்த கல்வியாண்டில் 2, 3, 4, 5 மற்றும் 7, 8, 9, 10-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். இதற்காக அச்சிடப்பட்ட புத்தகங்களை வரும் 22-ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழக அரசு அமைத்த உயர்மட்ட கமிட்டியின் அறிக்கை ஏற்புடையதாக இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சென்னை: அதிமுக அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வி சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது. சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் வரும் 22-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை அனுப்ப வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாநில பாட திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் என்று பல்வேறு பாட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.

எல்லாருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கும் வகையில் சமச்சீர் கல்வி சட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் இரண்டும், தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தன. இதைத் தொடர்ந்து 1, 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாட திட்டம் கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக ரூ.200 கோடி செலவில் புதிய பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் அமைச்சரவை கூடி சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதையடுத்து, சட்டசபையில் உடனடியாக சமச்சீர் கல்வி திருத்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை ஐகோர்ட் விசாரித்து, சமச்சீர் கல்வி திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. தடையை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என உத்தரவிட்டது.

மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி குறித்து உயர்நிலை கமிட்டி அமைத்து ஆய்வு செய்து, அறிக்கையை 3 வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் மீது சென்னை ஐகோர்ட் ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, தலைமைச் செயலர் தலைமையில் 9 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. இந்த உயர்நிலை கமிட்டி கூடி விவாதித்து அறிக்கை தயாரித்தது. சமச்சீர் கல்விக்காக உருவாக்கப்பட்ட பாட புத்தகங்கள் தரமற்றவை. இந்த புத்தகங்களை பயன்படுத்தினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு வக்கீல்களின் வாதங்கள் முடிந்து, கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பகல் 12.47 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம். சட்டத் திருத்தம் கொண்டு வந்து பழைய பாடதிட்டம் தொடரும் என அறிவித்தது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த புத்தகம் படிக்க வேண்டும் என தொடர்ந்து மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, இந்த கல்வியாண்டில் 2, 3, 4, 5 மற்றும் 7, 8, 9, 10-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். இதற்காக அச்சிடப்பட்ட புத்தகங்களை வரும் 22-ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழக அரசு அமைத்த உயர்மட்ட கமிட்டியின் அறிக்கை ஏற்புடையதாக இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக