புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகென் தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள், வீரர்கள் மற்றும் உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் சச்சினுக்கு சிவிலியன் விருதை தர ஆதரவாக தங்களது கருத்துக்களை ஏற்கனவே வெளிபடுத்தியிருந்தனர். பாரதரத்னா விருது தற்போது கலை, இலக்கியம், அறிவியல் சாதனைகள் மற்றும் பொதுசேவையில் அங்கீகாரம் பெற்றவர்களுக்கே வழங்கபடுவது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக