பிரிட்டனின் டே ஸ்மித் என்ற 4 வயது சிறுமி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் மிக சிறிய வயதில் 2 ஆயிரம் மீற்றர் தூரத்தை நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை உலக கின்னஸ் சாதனையிலும் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் இந்த சிறுமி மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனையாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுமி டேவின் சாதனை அளவை வேறு யாரும் இந்த வயதில் நிகழ்த்தவில்லை. எனவே அவர் சாதனையாளராக அறிவிக்கப்படலாம் என்றும் கின்னஸ் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அந்த சிறுமியின் சாதனையை 41 வயது தந்தை ராப் தாயார் டிரசன் பெருமிதம் பொங்க மகளை பார்க்கிறார்கள். 4 வயதில் 600 மீற்றர் நீந்துவதே மிகப்பெரிய விடயமாக இருக்கும்.
ஆனால் எனது மகள் 2 ஆயிரம் மீற்றரை நீந்தி பெரிய சாதனை படைத்து இருக்கிறாள் என்று கூறுகிறார்கள். கடந்த பெப்பிரவரி மாதம் முதல் இந்த சிறுமி நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிகக் ஆக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக