ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை

யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம் 

துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக