ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது - 02-03-2011

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று காலை 10 மணிமுதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கின.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப். 22ம் தேதியுடன் செய்முறைத் தேர்வுகள் முடிவடைந்தன. அதனைதொடர்ந்து, எழுத்துத் தேர்வுகள் இன்று
துவங்கின. தமிழகத்தில் 1,859 மையங்களிலும், புதுச்சேரியில் 31 மையங்களிலும் நடக்கும் இத்தேர்வில், ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் மூன்று லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர். மாணவியர், மூன்று லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர்.

தமிழகத்தில் ஏழு லட்சத்து 12 ஆயிரத்து 28 மாணவர்களும், புதுச்சேரியில் 11 ஆயிரத்து 517 மாணவர்களும் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் 33 ஆயிரத்து 858 மாணவர்கள் கூடுதலாக எழுதுகின்றனர். தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்காதபடி கண்காணிக்கவும், மீறி நடந்தால் உடனுக்குடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், 4,000 உறுப்பினர்கள் கொண்ட பல்வேறு பறக்கும் படை குழுக்களை, தேர்வுத் துறை அமைத்துள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின்கீழ் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நேற்று துவங்கின.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை, எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவர்கள் எழுதுகின்றனர். புதுச்சேரியில், 15 ஆயிரத்து 529 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

மார்ச் 22ம் தேதி துவங்கும் மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 252 மாணவர்களும், ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,873 மாணவர்களும் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கும் தேதியில் இருந்து, ஓ.எஸ்.எல்.சி., தேர்வும் துவங்குகிறது. இத்தேர்வை, 1,561 மாணவர்கள் எழுதுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக