ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சாதியக் கணக்கெடுப்பு சரிதானா?


காங்கிரஸ்,பாஜஉள்ளிட்ட பெரும்பான்மைக்கட்சிகள் சாதி வாரியக் கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் தந்துள்ளது. நாடாளுமன்றத்தில் லல்லு பிரசாத் யாதவ்,சரத் யாதவ் போன்ற வட இந்திய தலைவர்கள் பெரும் கிளர்ச்சி செய்த்ததால் காங்கிரஸ் அறை மனதோடு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகின்ற இத்தருணத்தில் இக்கணக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுத்ததை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ்,திராவிடர் கழக வீரமணி போன்ற அமைப்புகள் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இயக்கமும் நடத்தியது.

இந்துத்துவ அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழகத்தில் தினமலர் போன்ற இதழ்கள் இவ்வெதிற்ப்புக்கு தூபம் போடவும் செய்த்து.

1931ம் ஆண்டில் வெள்ளையன் ஆதிகத்தில் இருந்த போதே கடைசியாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தியது.பிறகு நட்த்தப்படவே இல்லை.

இந்தியாவில் சமூக அமைப்பு சாதியால் கட்டப்பட்டுள்ளது. இதில் அந்தஸ்து,புனிதம்,கௌரவம் எல்லாம் அடங்கி இருக்கிறது.

பணம் சொத்து இருந்தாலும் சாதி இழிவை நீர்த்துப் போகவைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு சட்ட பூர்வமாக கொடுக்கப்பட்டு இருந்தாலும், இன்று வரை பல துறைகளில் அமுல்படுத்தப்படவே இல்லை.

மண்டல் குழு அறிக்கை காங்கிரஸ்,பாஜக கட்சிகள் எதிர்த்து வந்த போதிலும் முன்னாள் பிரத மந்திரி கொடுத்த வாக்குறுதியின் பேரில் எதிர்ப்புகளை மீறி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அமுல் படுத்தினார். அதுவும் முதலில் கல்வியில் மட்டுமே நடைமுறைக்கு வந்தது.

சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை பெறவேண்டும். அது சாதியின் பெயராலையே பெறப்பட வேண்டும். இதற்கு போதிய அடிப்படை ஆதாராங்கள், சாதிய கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமலேயே இந்நாள் வரை ஆண்ட அரசுகள் உழைக்கும் மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றன. அரசின் உயர்மட்டத்தில்/பதவியில் உள்ளவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த பார்ப்பனிய/பனியா போன்ற உயர் சாதியினர் கீழ்த்தட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர். அண்ணல் அம்பேத்கர், தந்தைப் பெரியார் போன்றத் தலைவர்களின் போராட்டத்தினாலேயே இச்சலுகைகளே கிடைத்தது.

பார்ப்பனர்கள் சாதிய கணக்கெடுப்பு சாதியை ஊக்குவித்த்தாகிவிடும் என்ற கூற்றை பரப்பிவருகிறார்கள்.

சாதி இரண்டு பக்க கூறுகளை கொண்டதாக இருக்கிறது. ஒரு பக்கம் புனிதம் அதிக சலுகைகள் உயர் சாதியினர் மறுபக்கம் இழிவு அவர்கள் கொண்ட அத்துனை உரிமைகளும் மறுக்கப்பட்டவற்கள்..

புனிதத்தை கொண்ட சாதியினர்தான் சாதிகள் இல்லை என்று கூறி வருகின்றனர் அதுவும் அனைத்து உரிமைகளும் பெற்றுக் கொண்டே...

ஆனால் மலம் அள்ளுபவன், பறை அடிப்பவன், உழவுத்தொழில் செய்பவர்களுக்கு உள்ள அதிகாரங்கள் சலுகைகள் மிக மிக குறைவே சலுகைகள் புனிதங்கள் இல்லாதவையே...

இதையே அண்ணல் அம்பேத்கர் “ எல்லோரும் சாதி அமைப்பின் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த அடிமைகள் எல்லோரும் சம அந்தஸ்தில் சமமாக இருப்பதில்லை “ என்பார்.

சரி அடிமைகளை,சம அந்தஸ்தில் சமமாக இல்லாதவர்களை எப்படி அளவிடுவது?

சமுகத்தில் கல்வி,தொழில்,அந்தஸ்து ,பொருளாதார வாழ்க்கை அடிப்படையாக வைத்துக் கொண்டு கணக்கெடுப்பின் இயக்கத்தை நடத்தப்பட வேண்டும். இத்தகவல்கள் 2-3 சந்த்திக்காவது தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இக்கணக்கெடுப்பு முடிந்தவுடன் அனைத்து அடிப்படை தகவல்களும் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டும்.

அப்போதுகிடைக்காத விடைகளுக்கு பதில் கிடைத்துவிடும்..

ஆனால் இது நடக்குமா?

நடக்க விடுவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக