பளபளக்கும் சமச்சீர்க் கல்வியும், தடுமாறும் தமிழ்வழி கல்வியும்.
இப்படங்கள் தமிழக அரசின் சமச்சீர் கல்விக்காக தயாரிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு பாட நூல்களே.
காண்வெண்ட் பாடப் புத்தகத் தோற்றம்..
வண்ண வண்ண பக்கங்கள்.. ஓவியர் டிராஸ்கி மருது கொண்டு வடிவமைத்துள்ளார்கள். அவருக்கு ஒரு பாராட்டை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.
பட விளக்கங்கள் அதிகம்...
எழுத்து வடிவங்கள் குறைவு... புத்தக வடிவமைப்பு மாணவர்களை படிக்கத்தூண்டும்.
இந்நிலை எந்த அளவுக்கு தமிழக கல்விநிலையை மேம்படுத்தப்போகிறது. 2000ல் படித்த மாணவர்களின் வருகை பட்டியலில் விகிதப்படி ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்துள்ளது. காரணம்..
ஆங்கில மோகம்.. ஆங்கிலவழிக்கல்வி..
தனியார்கல்வி....
சாதாரண உழைக்கும் கூலித்தொழிலாளி முதற்கொண்டு மேல் நிலையில் உள்ளவர்கள் வரை ஆங்கில வழிக்கல்வியையே நாடுகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் உச்சநீதிமன்றம் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசின் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. நடப்பது தலைக்கீழ். தனியார் பள்ளிகள் திறக்கும் முன்பே பெற்றோர்கள் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து தங்கள் பிள்ளைகளின் சேர்க்கையை உறுதி செய்து கொண்டு வருகிறார்கள் என்பதே உண்மை.
அரசுப் பள்ளிகளின் நிலை...
கோடை விடுமுறையில் ஊரகப்பகுதியில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பணி என்னத்தெரியுமா?
தங்கள் பள்ளிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையாக பெற்றோர்களை நாடி அவர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆலோசனைகள்,அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.
இதில் ஏன் ஆசிரியர்களுக்கு இவ்வளவு அக்கரை?
எண்ணிக்கை போதுமான இலக்கு இருந்தால் அவர்கள் அந்த பள்ளியில் இருக்கமுடியும் இல்லையென்றால் வேறு இடத்திற்கு மாற்றலுக்கு தயாராக வேண்டியதுதான்.
சரி. இவ்வாசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்?
தனியார்,மெட்ரிக்,சிபிஎஸ்சி கல்வித்திட்டம் கொண்ட தனிப்பயிற்சியும் கொடுக்கும் பள்ளிகளில் இவர்கள் பிள்ளைகள் படிப்பார்கள். பார்க்கும் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? சம்பளம் வாங்க அரசுப்பள்ளி.. தங்கள் பிள்ளைகள் படிக்க தனியார் பள்ளி...
ஆங்கில மோகம்...
இக்கவர்ச்சி சமச்சீர்கல்வி மாணவர்களின் வருகையை உயர்த்துமா?
ஆங்கில வழியில் படித்து நுனிநாக்கில் வழிந்தோடும் ஆங்கிலத்தில் வீட்டின் கதவை உயர் ஊதியத்திற்கான வேலை தட்டும் என்பதே?!
வீட்டின் கூறையை பிய்த்துக் கொண்டு பணம் கரன்சியாக கொட்டோ கொட்டும் என்று தமிழக மக்களின் கனவு..
கல்வி வணிகமாகிவிட்டது..
பண இருந்தால் எக்கல்வி வேண்டுமானாலும் படிக்கலாம்?
பணமே இலக்கு.
இவர்கள் சொல்லும் அந்நிய மொழிக்கல்வியில் தேசபக்தி, நட்டுப்பற்று சொல்லித்தருமா?
படிக்கும் போதே அமெரிக்கா,லண்டன், பாரிஸ் கனவுகள்....
வெள்ளைக்காரனின் “மெகாலே” கல்வித்திட்டம் சிறப்பாக வாந்தி எடுப்பவனை நல்ல படிக்கும் மாணவன் என்று முத்திரை குத்துகிறது.
இக்கல்வியின் இலக்கு.. நோக்கு..
கல்வியின் உலகே. மருத்துவருக்கான உலகத்தை நோக்கி...
பொறியாளரின் கனவை நோக்கி இம்மாணவர்களைத் தள்ளுகிறது.
இதில் தான்.. உலகமயம்.. வணிகமயம்...அநியமயம் என்று உழைக்கும் மக்களை கரைத்து நீர்த்துப் போக வைக்கிறது. இந் நிலைதொடர்ந்தால் பல நூற்றாண்டுகளுக்கு எழமுடியாத நிலை ஏற்படும்.
தமிழில்.. தமிழால் முடியுமா?
ஏன் முடியாது?
தமிழ் வழியில் படித்தால் உயர்கல்விக்கு முன்னுரிமை
தமிழ்வழியில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை
நேரடி தேர்வு, நுழைவுத்தேர்வுகளில் தமிழ்வழியில் படித்து வருவோருக்கு சிறப்பு மதிப்பெண்கள்... போன்ற நடவடிக்கைகள்தான் தமிழக கல்வி நிலையை மாற்றும்..
ஏ.ஆர். ரகுமானின் செம்மொழிப்பாடலுக்கு அப்போதுதான் உயிர் கிடைக்கும்...
தமிழில் படித்தால் எல்லாமே கிடைக்கும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்குமா?
இவ்வேக்கத்தை செம்மொழிமாநாடு நிறைவேற்றாதவரை மாநாட்டுத்திட்டங்கள் அனைத்தும் கானல் நீரே!....
காண்வெண்ட் பாடப் புத்தகத் தோற்றம்..
வண்ண வண்ண பக்கங்கள்.. ஓவியர் டிராஸ்கி மருது கொண்டு வடிவமைத்துள்ளார்கள். அவருக்கு ஒரு பாராட்டை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.
பட விளக்கங்கள் அதிகம்...
எழுத்து வடிவங்கள் குறைவு... புத்தக வடிவமைப்பு மாணவர்களை படிக்கத்தூண்டும்.
இதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டியே ஆகவேண்டும்.
இந்நிலை எந்த அளவுக்கு தமிழக கல்விநிலையை மேம்படுத்தப்போகிறது. 2000ல் படித்த மாணவர்களின் வருகை பட்டியலில் விகிதப்படி ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்துள்ளது. காரணம்..
ஆங்கில மோகம்.. ஆங்கிலவழிக்கல்வி..
தனியார்கல்வி....
சாதாரண உழைக்கும் கூலித்தொழிலாளி முதற்கொண்டு மேல் நிலையில் உள்ளவர்கள் வரை ஆங்கில வழிக்கல்வியையே நாடுகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் உச்சநீதிமன்றம் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசின் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. நடப்பது தலைக்கீழ். தனியார் பள்ளிகள் திறக்கும் முன்பே பெற்றோர்கள் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து தங்கள் பிள்ளைகளின் சேர்க்கையை உறுதி செய்து கொண்டு வருகிறார்கள் என்பதே உண்மை.
அரசுப் பள்ளிகளின் நிலை...
கோடை விடுமுறையில் ஊரகப்பகுதியில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பணி என்னத்தெரியுமா?
தங்கள் பள்ளிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையாக பெற்றோர்களை நாடி அவர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆலோசனைகள்,அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.
இதில் ஏன் ஆசிரியர்களுக்கு இவ்வளவு அக்கரை?
எண்ணிக்கை போதுமான இலக்கு இருந்தால் அவர்கள் அந்த பள்ளியில் இருக்கமுடியும் இல்லையென்றால் வேறு இடத்திற்கு மாற்றலுக்கு தயாராக வேண்டியதுதான்.
சரி. இவ்வாசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்?
தனியார்,மெட்ரிக்,சிபிஎஸ்சி கல்வித்திட்டம் கொண்ட தனிப்பயிற்சியும் கொடுக்கும் பள்ளிகளில் இவர்கள் பிள்ளைகள் படிப்பார்கள். பார்க்கும் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? சம்பளம் வாங்க அரசுப்பள்ளி.. தங்கள் பிள்ளைகள் படிக்க தனியார் பள்ளி...
ஆங்கில மோகம்...
இக்கவர்ச்சி சமச்சீர்கல்வி மாணவர்களின் வருகையை உயர்த்துமா?
ஆங்கில வழியில் படித்து நுனிநாக்கில் வழிந்தோடும் ஆங்கிலத்தில் வீட்டின் கதவை உயர் ஊதியத்திற்கான வேலை தட்டும் என்பதே?!
வீட்டின் கூறையை பிய்த்துக் கொண்டு பணம் கரன்சியாக கொட்டோ கொட்டும் என்று தமிழக மக்களின் கனவு..
கல்வி வணிகமாகிவிட்டது..
பண இருந்தால் எக்கல்வி வேண்டுமானாலும் படிக்கலாம்?
பணமே இலக்கு.
இவர்கள் சொல்லும் அந்நிய மொழிக்கல்வியில் தேசபக்தி, நட்டுப்பற்று சொல்லித்தருமா?
படிக்கும் போதே அமெரிக்கா,லண்டன், பாரிஸ் கனவுகள்....
வெள்ளைக்காரனின் “மெகாலே” கல்வித்திட்டம் சிறப்பாக வாந்தி எடுப்பவனை நல்ல படிக்கும் மாணவன் என்று முத்திரை குத்துகிறது.
இக்கல்வியின் இலக்கு.. நோக்கு..
கல்வியின் உலகே. மருத்துவருக்கான உலகத்தை நோக்கி...
பொறியாளரின் கனவை நோக்கி இம்மாணவர்களைத் தள்ளுகிறது.
இதில் தான்.. உலகமயம்.. வணிகமயம்...அநியமயம் என்று உழைக்கும் மக்களை கரைத்து நீர்த்துப் போக வைக்கிறது. இந் நிலைதொடர்ந்தால் பல நூற்றாண்டுகளுக்கு எழமுடியாத நிலை ஏற்படும்.
தமிழில்.. தமிழால் முடியுமா?
ஏன் முடியாது?
தமிழ் வழியில் படித்தால் உயர்கல்விக்கு முன்னுரிமை
தமிழ்வழியில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை
நேரடி தேர்வு, நுழைவுத்தேர்வுகளில் தமிழ்வழியில் படித்து வருவோருக்கு சிறப்பு மதிப்பெண்கள்... போன்ற நடவடிக்கைகள்தான் தமிழக கல்வி நிலையை மாற்றும்..
ஏ.ஆர். ரகுமானின் செம்மொழிப்பாடலுக்கு அப்போதுதான் உயிர் கிடைக்கும்...
இவ்வேக்கத்தை செம்மொழிமாநாடு நிறைவேற்றாதவரை மாநாட்டுத்திட்டங்கள் அனைத்தும் கானல் நீரே!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக