சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. மெட்ரிகுலேஷன் தேர்வுகள் மார்ச் 22ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதியும் தொடங்கி ஏப்ரல் 11ல் முடிந்தன. மொத்தம் 6,922 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கி மே 6ம் தேதி வரை நடந்தது. அதைத் தொடர்ந்து மதிபெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிவடைந்தது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை மறுநாள் (27ம் தேதி) வெளியிட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகளை 27ம் தேதி வெளியிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தேர்வு முடிவுகள் 27ம் தேதி காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது. மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், இணைய தளங்கள், எஸ்எம்எஸ் மூலமும் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியிடப்படும். இப்போது எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக